இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி THE TESTIMONY OF JESUS CHRIST இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி 53-0829 சனிக்கிழமை மாலை, ஆகஸ்ட் 29, 1953 சிகாகோ காஸ்பல் டாபர்னக்கிள், சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி (53-0829) தயவுசெய்து ஒரு நிமிடம் நாம் தலைகளைத் தாழ்த்துகையில் நின்று கொண்டிருங்கள். எங்கள் பரலோகப் பிதாவே, உமது நேசகுமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நன்றியுள்ள இருதயங்களோடு இன்றிரவு நாங்கள் உம்மை நெருங்கி வருகிறோம். ஒரு காலத்தில் ஏழை புறஜாதியாராகிய நாங்கள், தேவனை விட்டு விலகி, இரட்சிப்பின் ஐக்கியத்திற்கு தூரமாய் இருந்து, ஊமையான விக்கிரகங் களினால் எப்படி இழுத்துச் செல்லப்பட்டோம் என்பதையும், ஏற்ற காலத்தில் கிறிஸ்து எங்கள் இடத்தில் மரித்தார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கிறோம். மிகவும் அழகாக இருந்தவர் கல்வாரியில் அவலட்சணமாக்கப்பட்டு, உருக்குலைக்கப் பட்டார்; அவருடைய பாடுகளின் மூலமாக நாங்கள் தேவனிடம் சமீபமாக கொண்டு வரப்படும்படிக்கே அப்படி நடந்தது. இன்றிரவு தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத்திகள் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் ஆச்சரியமான சிலாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம். 2 அப்படிப்பட்ட ஒரு ஆசீர்வாதத்திற்கு நாங்கள் தகுதியற்றவர்கள். நாங்கள் அப்படி இல்லை என்பதை... எங்கள் பாவங்களையும் எங்கள் தகுதியின்மையையும் அறிக்கையிடு கிறோம். ஆனால் மகிழ்ச்சியுடன், இயேசு எங்களுக்காக இந்த மாபெரும் ஆச்சரியமான காரியத்தைச் செய்திருக்கிறார் என்பதை மக்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். இந்த யாத்திரையில் நாம் செல்லும்போது, அந்நியர்கள் சிலுவையண்டைக்கு வந்து இரட்சிக்கப்பட வேண்டும் என்று வலதுபுறமும் இடதுபுறமும் சத்தமிட்டுக் கூறுவது இன்றிரவு நமது கடமையாக இருக்கிறது. தேவனே, இன்றிரவு அநேகர் இந்த இரட்சிப்பின் கிருபையைக் கண்டடையவும், வழிகெட்டு தூரமாய்ப் போன அநேகர் இன்றிரவு கல்வாரியை நோக்கிப் பார்த்து, குற்றவாளிகளாகிய எங்களுக்காக அங்கே குற்றமற்றவர் செலுத்திய அந்த உன்னத பலியைப் பார்த்து, தேவனோடு ஒப்புரவாகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். 3 எங்களை ஒன்றாக ஆசீர்வதியும். வியாதியுள்ளவர்களையும் தேவையிலிருப்பவர் களையும் குணமாக்கும். அநேகர் கஷ்டப் படுகிறார்கள். தட்பவெப்பநிலை மிகவும் சூடாக இருக்கிறது. அநேக...?... மக்கள் வியாதியா யிருக்கிறார்கள். ஆனால் நீர் யெகோவா-யீரேயாய் இருக்கிறீர். ஆகையால், உமது மீட்பின் வல்லமைகள் அனைத்திலும் இன்றிரவு நீர் உம்மை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். சகோதரர் பாக்ஸ்டர் இப்போதுதான் ஒப்புக்கொண்டதுபோல... நம்மை சந்திக்க வந்த நண்பர்களில் ஒருவர்... எங்களுக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்த சகோதரர் ஆஸ்போர்ன் இன்றிரவு இங்கே இருப்பது ஒரு சிலாக்கியம். நாங்கள் வாழ்க்கையில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே சந்தித்திருக்கிறோம், ஆனால் நாங்கள் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து தாவீது மற்றும் யோனத்தானுடைய அன்பு எங்களுக்குள் இருந்து வருகிறது. மேலும், சகோதரர் ஜான் ஷாரிட், சில நிமிடங்களுக்கு முன்புதான் நான் அவரை சந்தித்தேன், அவர் அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் நகரத்தைச் சேர்ந்த என்னுடைய இன்னொரு ஆருயிர் நண்பர். 4 ரெவரெண்ட் மிஸ்டர் பீலர், அங்குள்ள ஆசரிப்புக் கூடாரத்தில் இருக்கும் நமது போதகர்களில் ஒருவர், மற்றும் மிஸ்டர் மெக்டொவல், அவரும் ஒரு நண்பர்தான், ஜெபர்சன்வில் சபையிலிருந்து விமானத்தில் வந்து இன்றிரவு நம்மோடு இருக்கிறார். அவர்கள் வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சிய டைகிறோம். சகோதரர் மற்றும் சகோதரி வுட் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே இங்கே இருக்கிறார்கள். ஒருவர் இங்கே அமர்ந்து ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கிறார். சகோதரர் வுட் புத்தகக் கடையில் இருக்கிறார்... என் தாய், மற்றும் பல நண்பர்கள், இன்றிரவு உங்களுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 5 இன்றிரவு இந்த கட்டிடத்தில் இப்படி கூடியிருப்பதும், இந்த வானிலையின் வெப்பத்தின் கீழ் இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் மகிமையான ஆவியானவர் இந்தக் கட்டிடத்தில் இருக்கிறார், நோயாளிகளைக் குணமாக்கவும், தேவையிலிருப்பவர்களைத் திருப்தியாக்கவும், நமக்குத் தேவையான அனைத்தையும் சந்திக்கவும் அவர் ஆயத்தமாக இருக்கிறார். நீங்கள் கேட்பதற்கு முன்னமே இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை உங்கள் பரலோகப் பிதா அறிந்திருக்கிறார். அவர் நமக்கு எவ்வளவு அற்புதமானவர். அநேகமாக ஏற்கனவே வாசிக்கப்பட்ட சில வார்த்தைகளோடு இணைந்து செல்லும்படி, இந்த நேரத்தில் அவருடைய வார்த்தையை வாசிக்க நான் விரும்புகிறேன். இது யோவான் எழுதின சுவிசேஷம் 10-ம் அதிகாரம், 22-ம் வசனத்திலிருந்து ஆரம்பித்து காணப்படுகிறது. வியாதியுள்ளவர்களுக்காக நாம் ஜெபிப்பதற்கு முன்பாக இந்தப் பகுதியை வாசிக்க நான் விரும்புகிறேன். பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயி ருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்க வில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக் கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறி கிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்க வில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசி யுங்கள் என்றார். இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, (Therefore they sought again to take up stones: and he escaped out of their hand,) 6 கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பாராக. தேவன் தமது வார்த்தையை உறுதிப்படுத்தும் விதமாக, இயேசு கிறிஸ்துவின் சாட்சியின் மூலமாக, அவர் தேவனுடைய குமாரன் என்பதை மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னார், "வேதாகமத்தில் எங்கும் இயேசு, தான் தேவனுடைய குமாரன் என்று வெளிப் படையாகச் சொல்லவே இல்லை." அவர் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்ன பல இடங்கள் உள்ளன. அவர் சொன்னார்... யோவான் 4-ல், அவர் தம்மை தேவனுடைய குமாரன் என்று சொன்னார். மேலும் இங்கும் அவர் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொல்கிறார். தேவனுடைய அடையாளங்கள் அவருடைய குமாரனைப் பின்தொடர்ந்ததால், அவரை விசுவாசித்த மக்களும் அவரை தேவனுடைய குமாரன் என்று அடையாளம் கண்டு கொண்டார்கள்... அவருடைய குமாரன் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றிரவு நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அன்றைய தினம் தேவன் எந்த இயேசுவை நிரூபித்துக் காட்டினாரோ, அதே இயேசு இன்றிரவு தம்முடைய சபையில், தம்முடைய விசுவாசிகளோடு தம்மை நிரூபித்துக் காட்டுகிறார். ஏனென்றால், "சற்றுநேரத்துக்குப் பின்பு உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனெனில் நான் (தனிப்பட்ட பிரதிபெயர்), உலகத்தின் முடிவுபரியந்தமும் நான் உங்களுடனேகூட, உங்களுக்குள்ளும் இருப்பேன்," என்று இயேசு சொன்னார், இப்போது, வேறு யாரோ அல்ல, இயேசு தாமே இருப்பார். 7 அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, தமது சபையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், மேலும் அவர் சொன்னார், "நான் செய்கிறவை களை நீங்களும் செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவை களைவிடப் பெரியவைகளையும் செய்வீர்கள்." இப்போது, ஒரு மனிதராக இருக்கும் அவர், எப்படி பிதாவினிடத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வர முடியும் என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவர் சொன்னார், "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், தேவனிடத் திற்குப் போகிறேன்." அவர் ஆவியிலிருந்து வெளியே வந்து-நித்தியத்திலிருந்து காலத்திற் குள் வந்து, பாவத்தை அகற்றுவதற்காக, காலத்தைக் கடந்து, மீண்டும் நித்தியத்திற்குத் திரும்பிப் போனார். எனவே, அது-தேவனாகவே இருந்தது. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த அவர் நம்முடன் இருக்கிறார். மாம்சத்தில் இருந்த நாட்களில் அவர் செய்த காரியங்களை, அவர் இன்றிரவும் செய்து கொண்டிருக்கிறார், மேலும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தது முதல் செய்து வருகிறார். 8 சீஷர்கள் புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் எங்கும் போய் பிரசங்கம் பண்ணினார்கள்; கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியைகளை நடப்பித்து, தொடர்ந்து நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப் படுத்தினார் என்று வேதாகமம் சொல்கிறது. உடைந்த தொட்டிகளைக் குறித்து, ஒருவேளை இந்தச் சபையில் விநியோகிக்கப் பட்டிருக்கக்கூடிய ஒரு துண்டுப்பிரதியை நான் இன்று வாசித்துக்கொண்டிருந்தேன். அது மிகவும் சிறப்பான ஒரு துண்டுப்பிரதியாக இருந்தது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. பரிசுத்த ஆவியானவருக்குப் பதிலாக நாம் மனித இறையியலை மாற்று வழியாக்கி விட்டோம் என்பது உண்மைதான். அது வேலை செய்யாது. அது செய்யவே செய்யாது. பரிசுத்த ஆவியானவர்தான்-சபையின் அரசாங்கமாக இருக்கிறார். உலகத்திற்கு அது பைத்தியமாக இருக்கிறது; ஆனால் விசுவாசிக் கிறவர்களுக்கோ அது இரட்சிப்பாக இருக்கிறது. 9 இன்றிரவு அந்தச் சபையோடு எண்ணப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒருவேளை நாளையும், அல்லது நாளை மதியமும், கர்த்தருக்குச் சித்தமானால் நான் இங்குள்ள ஆசரிப்புக் கூடாரத்தில் பிரசங்கிக்க வேண்டியிருந்தாலும்... சற்று காலத்திற்கு முன்பு நான் இங்கே பிரசங்கித்த அதே தலைப்பில் பிரசங்கிக்கலாம் என்று யோசித்துக் கொண்டி ருந்தேன்: நான் ஏன் ஒரு ஹோலி-ரோலராக (Holy-roller) இருக்கிறேன்?" அது ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாப்டிஸ்ட் சபையிலிருந்து விலகி, ஹோலி-ரோலர்கள் என்று அழைக்கப் படுபவர்களோடு நான் ஏன் என்னை இணைத்துக்கொண்டேன்? ஏனென்றால் அதுதான் வேதாகமம். அதனால் தான்... அவர்களோடு எண்ணப்படுகிறேன். அப்படிச் செய்வதற்கான மாபெரும் சிலாக்கியத்தை தேவன் எனக்கு அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாப்டிஸ்ட், மெத்தடிஸ்ட், பிரஸ்பிடேரியன் அல்லது வேறு எந்தச் சபையையும் அவமதிக்கவில்லை. விசுவாசிகள் எந்தச் சபைக்குச் சென்றாலும் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மறுபடியும் பிறந்திருந்தால், அவர்கள் எந்தச் சபையாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்தவர் கள்தான். ஆனால், தேவனுடைய மாபெரும் வல்லமைகளுக்காகவும், அசாதாரணமான காரியங்களுக்காகவும் நிலைத்து நிற்கும் சபைகளைக் குறித்தே நான் பேசுகிறேன். 10 பாருங்கள், ஒரு மனிதனுக்குப் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்றால், அவனால் அந்தக் காரியங்களை விசுவாசிக்க முடியாது. ஏனென்றால், ஒரு மனிதன் தேவனுடைய ஆவியால் பிறக்கப்படும்போது, அவன் தேவனுடைய குமாரனாக மாறுகிறான். அவனுடைய சுபாவம் தேவனுக்கு ஒப்பாக மாறுகிறது. அதனால்தான் இயேசு, "தேவர் களாயிருக்கிறீர்கள் என்று உங்கள் நியாயப் பிரமாணத்தில் சொல்லப்படவில்லையா?" என்று கேட்டார். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய பண்புகளாக இருக்கிறீர்கள். அத்துடன் தேவன் தாமே... எல்லாமே சாத்தியமாகும். இன்றிரவு நாம் அமர்ந்திருக்கிற இந்த உலகத்தையே தேவன்தான் உருவாக்கினார். இந்த உலகம், நாம் இப்போது இதன் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம், தேவனுடைய ஒரு வார்த்தை வெளிப் படுத்தப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை. தேவன் உலகத்தை வார்த்தையினால் உருவாக் கினார். எத்தனை பேர் அதை விசுவாசிக் கிறீர்கள்? இது தேவனுடைய வார்த்தை வெளிப் படுத்தப்பட்டதாகும். இந்தப் பிரசங்க மேடை, இந்த மரம், இங்குள்ள ஒவ்வொன்றும், கண்கள் காணும் ஒவ்வொன்றும் தேவன் தம் வார்த்தையினால் உருவாக்கியதால்தான் வெளிப் படுத்தப்பட்டது. 11 அப்படியானால், ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், அவன் காரணகாரியங்களுக்குச் செவிகொடுக்கவே மாட்டான். தேவனை காரணகாரியங்களினால் அளவிட முடியாது. தேவன் விசுவாசிக் கப்படுகிறார். நாம் தேவனை இறையியலின் மூலம் அறியவில்லை. நாம் தேவனை கல்வியின் மூலம் அறியவில்லை. நாம் தேவனை காரணங்களின் மூலம் அறியவில்லை. நாம் தேவனை விசுவாசத்தினாலே அறிகிறோம். இது காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் அதைக் காரணத்தினால் விளங்கிக் கொள்ள முடியாது. அதுதான் எங்களைப் போன்ற விசுவாசிகளுக்கு அதை மிகவும் உண்மையானதாக மாற்றுகிறது. காணப்படாத வைகளை நாங்கள் நோக்குகிறோம். நாங்கள் காணாத காரியங்களை, நாங்கள் நோக்கு கிறோம்-நாங்கள் அதையே நோக்குகிறோம். உங்களுக்கு அதிக தொந்தரவாக இருக்காது என்றால், ஒரு சாட்சி சொல்வதற்கு எனக்கு நேரம் இருக்கலாம். என் வீட்டில் பலமுறை... ஜெப வரிசையை ஆரம்பிப்பதற்கு கடிகாரத்தின் படி இன்னும் சுமார் பத்து நிமிடங்கள் எனக்கு இருக்கிறது. சனிக்கிழமை இரவு... 12 வீட்டில் பல நேரங்களில், யாராவது... இன்று ஒரு உணவகத்தில் ஒரு இளைஞர், "சகோதரர் பிரன்ஹாம், மக்களால் உங்களுக்கு அதிக தொல்லை என்று நினைக்கிறேன்" என்றார். அது தொல்லை என்று நான் நினைக்கவில்லை. தேவனுக்காக பசியும் தாகமுமாக இருக்கும் மிகச் சிறந்த ஒரு சகோதரனான அந்த இளைஞனிடம் நான் சொன்னேன்; நான் சொன்னேன், "இல்லை, வரும் அருமையான மக்களில், தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேர் குணமடையவோ அல்லது மன அமைதியைக் கண்டுபிடிக்கவோ உண்மையாகவே தீவிரமாகவும் நேர்மையாகவும் முயற்சி செய்கிறார்கள். இது பல நேரங்களில் என்னை சோர்வடையச் செய்கிறது. அதற்காக நான் கொஞ்ச நேரம் விலகிச் செல்ல வேண்டி யிருக்கிறது. நான் மக்களை நேசிக்கிறேன். நோயுற்ற குழந்தைகள் வராண்டாவில் இருக்கும்போதும், ஒரு தகப்பன் தன் மனைவியுடன் இருக்கும்போதும், அவள் புற்றுநோயால் இறந்துகொண்டிருக்கும்போதும், ஒரு குவளை தண்ணீர் கேட்கும்போதும், நான் அறைக்குள் தங்கி ஒரு மணிநேரம் தூங்க முயற்சி செய்ய முடியாது. இரவு நேரங்களில், சில சமயங்களில் நான் என் ஆடைகளை மாற்றுவதே இல்லை. பின்னர் நான் மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும்போது-என்னால் தாங்கிக்கொள்ள முடியாதபோது, நான் வேறு எங்காவது சென்றுவிட வேண்டி யிருக்கிறது. 13 ஆனால் அது என்ன? அது மக்களின் ஏக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் திரைக்கு அப்பால் பார்க்கவே ஏங்குகிறான். ஆரம்ப நூற்றாண்டுகளில் இங்கிலாந்து ராஜாவுக்கு, அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தபோது... அவர்கள் வெண்மையான தோற்றமும் நீண்ட பொன்னிற முடியும் கொண்டவர்களாக இருந்ததால் முதலில் "ஏஞ்சல்-லேண்ட்" என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள்... ராஜா... அவரது ஞானஸ்நானத்திற்கு சற்று முன்பு, ஒருநாள் இரவு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார், அங்கே ஒரு பெரிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய பறவை அந்த நெருப்பின் வெளிச்சத்திற்குள் பறந்து வந்துவிட்டு, மீண்டும் வெளியே பறந்து சென்றது. அவர் கேட்டார், "அது எங்கிருந்து வந்தது, எங்கே போனது?" அது மனிதர்களைப் போலவே இருக்கிறது. அவன் எங்கிருந்து வந்தான்? அவன் எங்கே போனான்? நாம் உலகத்திற்கு வருகிறோம்; நாம் செல்கிறோம். ஒவ்வொரு மனிதனும் கடந்து செல்ல வேண்டிய அந்தத் திரைக்குப் பின்னால் இருப்பதை தனக்கு அறிவிக்கும் எதையாவது கண்டுபிடிக்கக் கூடிய எந்த மனிதனும், அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பான். 14 சிறிது காலத்திற்கு முன்பு, ஒரு சிறந்த பிரஸ்பிடேரியன் போதகர், மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு சகோதரரிடம் கேட்டார், "மேற்கு கடற்கரை நெடுகிலும் எங்களுக்கு பெரிய... சபைகள் இருந்தன, ஆனால் கிறிஸ்டியன் சயின்ஸ் (Christian Science) அவைகளை உடைத்துப்போட்டது." அந்தச் சகோதரர் திரும்பிப் பார்த்துச் சொன்னார், "நீங்கள் தேவனுடைய சித்தத்தில் நிலைத்திருந்திருந்தால், கிறிஸ்டியன் சயின் ஸுக்கு எந்த அவசியமும் இருந்திருக்காது." அது சரிதான். சபை தரம் குறைந்து, அசாதாரணமான காரியங்களை விட்டு விலகிச் செல்கிறது, ஆனால் மனிதன் இன்னும் மனிதனாகவே இருக்கிறான். அவன்-அவன் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவனாக இருக்கிறான், மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்யும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தேவனை அவன் தேடுகிறான். நான் இப்போதுதான் கலிபோர்னியாவில் இருந்து திரும்பினேன், அங்கே காங்கிரஸ் காரரான அப்ஷா... உங்களில் அநேகர் அவர் குணமானதைக் குறித்துக் கேள்விப் பட்டிருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு தரிசனத்தில் ஒரு மனிதன் விளையாடுவதையும், ஒரு சிறுவன் வைக்கோல் போரில் இருப்பதையும் போன்ற காரியங்களை நான் கண்டேன். நீங்கள் அந்தத் தரிசனத்தைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்-வாசித்திருப்பீர்கள். அவர் சுமார் அறுபத்தாறு வருடங்களாக ஒரு ஊனமுற்றவராக இருந்தார். வரிசைகளில் ஒரு நாற்காலியில் பின்னால் அமர்ந்திருந்தபோதே அவர் உடனடியாக குணமாக்கப்பட்டார். கர்த்தராகிய இயேசு வந்து, தரிசனத்தைக் காண்பித்து, என்ன நடந்தது என்பதை அவரிடம் சொல்லி, அவரை எழுந்திருக்கச் சொன்னார், அவர் குணமானார். அவர் கீழ்ப்படிந்தார், மேலும் அவர் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் நாள் வரை அவர் நலமாகவே இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு, ஊனத்தினால் அல்ல... ஊனம் அவரைக் கொல்லவில்லை. அவர் சும்மா... அவருக்கு சுமார் தொண்ணூறு வயதாகிவிட்டிருந்தது, எனவே அவர் முதிர்வயதின் காரணமாகவே இறந்தார். 15 நான் வீட்டிற்கு வந்தேன்; என் மனைவி என்னிடம் சொன்னாள்; அவள் சொன்னாள், "பில்லி, உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியைச் சொல்ல வேண்டும்." அவள் சொன்னாள், "உங்களுடைய நல்ல நண்பரான வில்லியம் ஹால் (மில்டவுன் பாப்டிஸ்ட் சபையில் நான் மனந்திரும்பச் செய்தவர்களில் ஒருவர்) புற்றுநோயால் இறந்துகொண்டிருக்கிறார்." நான் கேட்டேன், "நிச்சயமாக சகோதரர் ஹால் இல்லையே?" "ஆமாம்." அவள் சொன்னாள், "காரிடானைச் சேர்ந்த டாக்டர் தில்மேன் அவரிடம் அவர் இனிமேல் உயிர்வாழ முடியாது என்று சொல்லிவிட்டார்; அவர் இறந்து கொண்டிருக்கிறார்." அவள் சொன்னாள், "அவர் அவரை நியூ அல்பானிக்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் இப்போது தனது சில உறவினர்களோடு இங்கே வெளியே இருக்கிறார், அவர் இறந்துகொண்டிருக்கிறார்." அன்று இரவு நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் சுமார் ஐம்பது பவுண்டுகள் எடை குறைந்திருந்தார், உடல் முழுவதும் மிகவும் மஞ்சளாக இருந்தது. கல்லீரலில் புற்றுநோய் இருந்தது, மிகவும் மோசமாக இருந்தது. மறுநாள் நான் அவனுக்காக ஜெபம்பண்ணினேன். நான் திரும்பிப் போனேன், அவன் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அன்று மாலையில் மீண்டும் அவனுக்காக ஜெபம்பண்ணினேன். நான் திரும்பிப் போனேன், அவர் கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருந்தார். நான் மீண்டும் அவருக்காக ஜெபித்தேன். 16 திருமதி ஹால், அவர் எனக்கு நல்ல தோழி (நான் அவர்கள் வீட்டில் வசித்திருக்கிறேன்), அவர் கேட்டார், "சகோதரர் பில்லி, நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?" நான் சொன்னேன், "நான் செய்யக்கூடிய ஒரே காரியம், சகோதரி ஹால், தேவனிடம் கேட்பதுதான்." அவள் கேட்டாள், "சரி, ஏதாவது... உங்களுக்கு ஏதாவது மருத்துவ சிகிச்சை தெரியுமா?" நான் சொன்னேன், "சரி, இப்போது கேளுங்கள், மருத்துவர்கள் என்பவர்கள் போதகர்கள் அல்லது வேறு எதைப்போலவும் தான். நீங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்." நான் சொன்னேன், "நிச்சயமாக, இங்கே இருக்கும் என் சிறிய நண்பர் டாக்டர் அடேர், நாங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒன்றாக இருந்தோம். நாங்கள் எப்போதும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறோம். மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை அவர்தான் சிறந்தவர் என்று நினைக்கிறேன்." அவள் கேட்டாள், "அவர் கீழே வந்து திரு. ஹாலைப் பார்ப்பாரா என்று ஆச்சரியப் படுகிறேன்?" நான் சொன்னேன், "நான் அவரிடம் கேட்கிறேன்." 17 நான் மருத்துவரை அழைத்தேன், அவர் சொன்னார், "சரி, பில்லி," அவர் சொன்னார், "நான் அங்கே கீழே வர முடியும்." ஆனால் அவர் சொன்னார், "நான் எக்ஸ்ரேக்களை மட்டும் போய்ப் பார்க்கிறேன்." அவர் சொன்னார், "அவர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்திருந்தால், அங்கே புற்றுநோய் இருக்கிறது. என்னால் அவ்வளவுதான் செய்ய முடியும், அது அவருக்கு மேலும் செலவைத்தான் வைக்கும்." அவர் சென்று எக்ஸ்ரேக்களைப் பார்த்தார்; சொன்னார், "ஆம், அவருக்கு புற்றுநோய் இருக்கிறது." நான் கேட்டேன், "நீங்கள் செய்யக்கூடியது ஏதாவது இருக்கிறதா?" அவர் சொன்னார், "சரி, நாம் அவரை லூயிஸ்வில்லியில் உள்ள ஏபிலுக்கு அனுப்பலாம்." அது லூயிஸ்வில்லியில் உள்ள ஒரு சிறந்த புற்றுநோய் மருத்துவமனை. எனவே நான் திருமதி ஹாலிடம் சொன்னேன். அவர்கள் அவரைத் தயார்படுத்தி, அவரைப் போர்த்தி ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி, அவரை அங்கே அழைத்துச் சென்று பரிசோதனை செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவர் சொன்னார், "சரி..." சொன்னார்... அவர்கள் டாக்டர் அடேரிடம் சொல்வார்கள். மேலும் ஒரு மருத்துவர் என்னை அழைத்தார், சொன்னார், "பில்லி?" நான் கேட்டேன், "ஆம், டாக்டர்?" அவர் சொன்னார், "சரி, அந்த... உங்கள் நண்பர் திரு. ஹால்," (இப்போது இங்கேதான் அந்த குறிப்பு இருக்கிறது) சொன்னார், "அவர் அடுத்த நான்கு நாட்களில் படகிலிருந்து குதிக்கப் போகிறார்." நான் சொன்னேன், "அதைக் கேட்பதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது டாக்டர். நீங்கள் எதுவும் செய்ய முடியாதா?" 18 அவர் சொன்னார், "பில்லி, அந்த மனிதனின் கல்லீரலை வெளியே எடுத்துவிட்டு அவர் உயிர்வாழ முடியாது." அவர் சொன்னார், "அவருக்கு வந்திருப்பதை வைத்து, சும்மா-அவர் அப்படியே வாழ வேண்டியதுதான்." அவர் சொன்னார், "அவருடைய நேரம் வந்துவிட்டது." மேலும் அவர் சொன்னார், "அவர் ஒரு போதகராக இருந்தால், அவர் இறப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்." நான் சொன்னேன், "ஓ, அவர் இறப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்." ஆனால் நான் சொன்னேன், "அவர் இன்னும் ஒரு இளைஞர்தான், சுமார் ஐம்பத்தாறு, ஐம்பத் தெட்டு வயது இருக்கும். கர்த்தருக்காக அவர் அநேக வேலைகளைச் செய்ய முடியும். அதைக் கேட்க எனக்கு வருத்தமாக இருக்கிறது, டாக்டர் அடேர்." அவர் சொன்னார், "ஆனால் அவர் போகத்தான் போகிறார்." சொன்னார், "நாங்கள் பார்த்த அதே காரியத்தைத்தான் ஏபிலும் பார்த்திருக்கிறார்கள். நாங்கள் அவருக்குப் பரிசோதனை செய்தோம், அவருக்கு புற்றுநோய் இருக்கிறது. அவரது கல்லீரல் முழுமையாக புற்றுநோயால் அரிக்கப்பட்டிருக்கிறது." நான் சொன்னேன், "ஆம், ஐயா." நான் சொன்னேன், "சரி, மிக்க நன்றி." நான் சொன்னேன், "நான் உங்களுக்குப் பணம் தருகிறேன்." 19 நிச்சயமாக, ஒரு கிறிஸ்தவருக்காகவோ, அல்லது விசுவாசிக்காகவோ, போதகருக்காகவோ அவர் செய்த எதற்கும் அவர் ஒருபோதும் பணம் வாங்க மாட்டார். ஆகையால் நான் சொன்னேன்... நான் கீழே சென்று திருமதி ஹாலிடம் சொன்னேன், நான் சொன்னேன், "சரி, திருமதி ஹால், நான்-நான் உங்களுக்கு அந்தச் செய்தியைச் சொல்கிறேன், நீங்கள் வெளியே வாருங்கள்." மேலும் நான் சொன்னேன், "அவர் நான்கு நாட்களில் இறந்துவிடுவார் என்று மருத்துவர் சொன்னார்." அவள் கத்த ஆரம்பித்தாள். நான் சொன்னேன், "இப்போது சகோதரி ஹால், சகோதரர் ஹாலும் நானும் பலமுறை பிரசங்க மேடையில் நின்று ஒன்றாகப் பிரசங்கித்திருக்கிறோம், மேலும் அன்பு இயேசுவைக் குறித்துப் பேசியிருக்கிறோம்..." அவள் சொன்னாள், "ஓ, ஆனால் அவர் இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை." நான் சொன்னேன், "சரி, தேவன் ஒருவேளை அவரைத் தம்முடைய வீட்டிற்கு அழைக்கிறார், திருமதி ஹால்." நான் சொன்னேன், "நாம் உள்ளே சென்று ஜெபிப்போம்." 20 பிறகு என் செயலாளர், என் மனைவி, என் மாமியார் மற்றும் எங்களில் பலரும் ஜெபிக்க உள்ளே சென்றோம். அவர் கிட்டத்தட்ட நினைவிழந்த நிலையில் இருந்தார், அவர் எவ்வளவுக்கு மஞ்சளாக இருக்க முடியுமோ அவ்வளவு மஞ்சளாக இருந்தார், யாரோ ஒருவர் அவரது கைகளைத் தேய்த்துக்கொண்டிருந்தார், அவருடைய கண்கள் ஆழமாக உள்ளே குழிவிழுந்திருந்தன, மிகவும் மஞ்சளாக இருந்தது: கல்லீரல் நிலைமை, உங்களுக்குத் தெரியும், புற்றுநோய். ஆகையால் நான் வீட்டிற்குச் சென்றேன். மறுநாள் காலையில் நான் ஓகியோவில் உள்ள டொலிடோவுக்கும், பென்சில்வேனியாவில் உள்ள எரீக்கும் செல்ல வேண்டியிருந்தது, ஒரு நாள் வீட்டிற்கு வந்து, ஜெபர்சன்வில்லியில் உள்ள உயர்நிலைப் பள்ளி உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு இரவு தங்கிவிட்டு, பின்னர் அங்கிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்லவி ருந்தேன். அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான்-நான் கென்டக்கியில் பிறந்தேன். நான்... என் மனந்திரும்புதல் அணில்களை வேட்டையாட விரும்புவதிலிருந்து என்னை ஒருபோதும் தடுத்து நிறுத்தவில்லை. நான்-நான் இப்போதும் அணில் வேட்டையாட விரும்புகிறேன். எனவே, அங்கு யாரும் இல்லையென்றால், அடுத்த நாள் அதிகாலை யிலேயே வெளியே செல்லலாம் என்று நினைத்தேன், வீடு சுமார் பன்னிரண்டு மணிக்கு காலியானது. நான் என்னுடைய சிறிய .22 ரைஃபிளை எடுத்து ஒரு மூலையில் வைத்தேன், என்னுடைய பழைய-பழைய மேலாடை யையும் எடுத்து, வேட்டைக்குச் செல்லத் தயாராக இருந்தேன். 21 மூன்று மணிக்கு-அலாரம் அடித்தது. நான் எழுந்து, என் உடைகளை அணிந்துகொண்டு, ஓடுபாதையை, அல்லது வண்டிப்பாதையை எட்டிப் பார்த்தேன், அங்கே யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. எனவே நான் நினைத்தேன், "சரி, நான் இப்போது புறப்படுவது-சரியாக இருக்கும்." நான் வேட்டையாடப் போகிறேன் என்பதை விட, கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காகவே வெளியே செல்லவிருந்தேன். எனவே நான் குளியலறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன், நான் பார்த்தபோது-நடைபாதைக்குள் நுழைந்தபோது, அங்கே இவ்வளவு பெரிய ஒரு சிறிய பச்சை ஆப்பிள் இருந்தது, அது மிகவும் கரடுமுரடாகவும், அதனுள் முழுவதும் புழுக்களும் இருந்தன, அது துளைகள் போடப்பட்டு உண்ணப்பட்டது போல் காணப்பட்டது. அது தொங்கிக் கொண்டிருந்தது; நான் நினைத்தேன், "சரி, என் மனைவி அதை எதற்காக சுவரில் வைத்தாள்?" என்று எண்ணினேன்... "அது மிகவும் மோசமாக இருக்கும்." ஒரு சிறிய, பழைய, கரடுமுரடான, பச்சை நிற, புளிப்பாகத் தோற்றமளிக்கும் ஆப்பிள் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது... 22 சரி, நான் நினைத்தேன், "ஐயோ, நான் சுவரில் அதைவிட வித்தியாசமான ஒன்றை வைத்திருப்பேன்." நான் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன், ஏனென்றால் கூடத்தில் இருந்த வெளிச்சம் சற்று உள்ளே பிரகாசித்துக் கொண்டிருந்தது, நான் கடந்து செல்லும் போது அந்த மூலையில் அதை கவனித்தேன். நான் தற்செயலாகப் பார்த்தேன், அது மேலேயும் கீழேயும் நகர்ந்து கொண்டிருந்தது. அது சுவரில் இல்லை. அது அப்படியே காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது. எனவே அங்கே ஏதோ நடக்கிறது என்று எனக்குத் தெரிந்தது. நான் மெதுவாக அந்த மூலைக்குச் சென்று, என் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, என் பெரிய பழைய தொப்பியைக் கழற்றினேன். நான் முழங்கால்படியிட்டேன். நான் கேட்டேன், "என் பிதா தமது ஊழியன் எதை அறிய வேண்டுமென்று விரும்புகிறார்?" நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதே போல இன்னொன்று கீழே வந்து அதன் அருகில் நின்றது, பின்னர் மற்றொன்று, மற்றொன்று என ஐந்து ஆப்பிள்கள் அங்கே நிற்கும் வரை வந்தன. பின்பு கீழே ஒரு மிகப்பெரிய ஆப்பிள் வந்தது, அது சிவப்பு கோடுகளுடன் கூடிய மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அது அப்படியே பெரியதாக ஒன்றைப் பிடித்து, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என விழுங்கியது. அதன்பிறகு அந்த ஆப்பிள் மறைந்துவிட்டது. அதற்குச் சற்று மேலே, அவர்கள் எடுத்த அந்தப் படத்தில்-நீங்கள் பார்க்கும் அந்த ஒளி, அதற்கு மேலே நின்றுகொண்டிருந்தது: அதுவே கர்த்தருடைய தூதன், இரவில் நீங்கள் காணும் இந்த காரியங்கள் எல்லாவற்றையும் செய்கிறவர் அவரே. 23 அவர் அங்கே மேலே நின்று கொண்டிருந்தார். அது கிட்டத்தட்ட, "ஊ, ஊ!" என்று சுழல்வது போல சத்தம் எழுப்பியது. நான் கேட்டேன், "என் ஆண்டவர் தமது ஊழியன் எதை அறிய வேண்டுமென்று விரும்புகிறார்?" அவர் சொன்னார், "எழுந்து நில்." நான் எழுந்து நின்றேன். அவர் கூறினார், "நீ போய் திரு. ஹாலிடம் சொல், கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் மரிக்கமாட்டார், பிழைப்பார்." அன்று எந்த அணில் வேட்டையும் இல்லை. என்னால் முடிந்த அளவு வேகமாக விரைந்தேன். மீண்டும் அறைக்குச் சென்று என் மனைவியை எழுப்பினேன். நான் கேட்டேன், "அன்பே?" அவள் கேட்டாள், "நீங்கள் வேட்டையாடப் போகிறீர்களா?" நான் சொன்னேன், "இல்லை, அன்பே. நான் வாசலருகே கர்த்தருடைய தூதனை சந்தித்தேன், அவர் என்னைச் சென்று சகோதரர் ஹாலிடம் அவர் மரிக்கப் போவதில்லை என்று அவர் சொன்னதாகச் சொல்லச் சொன்னார்." உடனே அவள் அழத் தொடங்கினாள். நான் மிக விரைவாக என் உடைகளை மாற்றிக்கொண்டு திரு. ஹாலின் வீட்டிற்குச் சென்றேன், நான் சொன்னேன்... உள்ளே சென்றேன். அது விடிந்துகொண்டிருக்கும் நேரமாக இருந்தது. அவர்கள் அனைவரும், கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்கள் அவரை எழுப்பி உட்கார வைத்திருந்தனர். அவர் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருந்தார். 24 நான் உள்ளே ஓடினேன்... நான் சொன்னேன்... அவர்கள், "எப்படி இருக்கிறீர்கள், சகோதரர் பிரன்ஹாம்" என்றார்கள். நான் கூறினேன், "சகோதரி ஹால்? அறையில் உள்ள அனைவரும் ஒன்று கூடுங்கள். என்னிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது இருக்கிறது." ம்ம்ம். அதை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. அது எதுவாக இருந்தாலும் சரி. சாத்தான் நரகத்திலிருந்து அனுப்பக்கூடிய எல்லா பிசாசுகளும் வந்தாலும், அதற்கு இதனுடன் எந்த சம்பந்தமும் இல்லை, ஒரு சிறிதும் இல்லை. இங்கே இந்தக் கட்டடத்தில், ஏதோ ஒன்றைக் குறித்து அப்படிச் சொல்லப்படுவதை நீங்கள் கேட்கும்போது, என்ன நடக்கிறது என்று மட்டும் பாருங்கள். அல்லது அவருடைய தகுதியற்ற ஊழியனின் முழு வாழ்க்கையிலும், எப்போதாவது, எங்கேனும் அப்படி புறப்பட்டு வருவதை இங்குள்ள யாராவது கேட்டிருந்தால், அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். அது எப்போதும் பரிபூரண மானது. நான் சொன்னேன், "அவர் மரிக்கமாட்டார், ஆனால் பிழைப்பார்." அவர்கள் தொடர்ந்து சத்தமிட்டு அலறத் தொடங்கினார்கள். நான் வெளியே வந்தேன். 25 மறுநாள் நான் புறப்பட்டேன். சகோதரர்... ஓஹியோவில் உள்ள டோலிடோவில் சகோதரர் பாக்ஸ்டரை சந்தித்தேன். திரும்பும் வழியில் நாங்கள் கூட்டங்களை நடத்தினோம். நான் அன்று மதியம் வந்தடைந்தேன். அன்று இரவு எனக்கு ஒரு கூட்டம் இருந்தது. சகோதரர் மெக்டொவல், அன்று இரவு நீங்களும் சகோதரர் மார்கனும் என்னை அறைக்கு அழைத்துச் செல்ல உதவினீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த அரங்கத்தில் சுமார் நான்காயிரம் பேருக்கு மட்டுமே இருக்கைகள் இருந்தன. உள்ளே சுமார் நான்காயிரம் பேரும் வெளியே நான்காயிரம் பேரும் இருந்தனர். எனவே நான் மேடைக்கு வந்தபோது, பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குச் சரியாக முன்பாக, மிகச் சிறந்த மருத்துவரான டாக்டர் பால்ட்வின் உட்கார்ந்திருந்ததை நான் தற்செயலாகப் பார்த்தேன். ஜெஃபர்சன் வில்லியைச் சேர்ந்த உங்களில் பலருக்கு அவரைத் தெரியும். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, எல்லாமே நடந்த பிறகும் எதனாலும் நிறுத்த முடியாதிருந்த நிலையில், அவருடைய மனைவி எனது அறையில் ஆஸ்துமாவிலிருந்து குணமாக்கப்பட்டார். 26 அவர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். அவர் சொன்னார், "பில்லி, நான் அவளை முழுமையாகப் பரிசோதித்து விட்டேன்; அவளுக்கு அதில் ஒரு சிறு துளி கூட எந்த விதத்திலும் இல்லை." அவள் குணமடைந்திருந்தாள். எனவே நான் சொன்னேன், "இன்று இரவு உங்களை இங்கே பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி, டாக்டர் பால்ட்வின்." நான் அப்படியே பின்னால் இருந்த படிகளில் தற்செயலாகப் பார்த்தபோது, அங்கே திரு. ஹாலின் மருத்துவரான, கோரிடானைச் சேர்ந்த டாக்டர் கார்ல் டில்மேன் அமர்ந்திருந்தார். நான் கூறினேன், "உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, டாக்டர் டில்மேன்." வாசலில் எங்கள் மருத்துவரான டாக்டர் சாம் அடேர் நின்று கொண்டிருந்தார். நான் சொன்னேன், "உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, டாக்டர் அடேர். எங்களுக்கு இருக்கை இல்லாததற்கு மன்னிக்கவும்." நான் தற்செயலாக இங்கே பார்த்தேன். முதலாவதாக அமர்ந்திருந்தது யார்? சகோதரர் ஹால் தான் என்னை நோக்கிக் கொண்டிருந்தார். 27 நான் நினைத்தேன், "நல்லது." "நன்றி, அன்பான பிதாவே," என்று நான் நினைத்தேன். நான் சகோதரர் ஹாலைப் பார்த்தேன். நான் கூறினேன், "டாக்டர் டில்மேன், கொஞ்ச காலத்திற்கு முன்பு, இங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீங்கள் கைவிட்ட அந்த திரு. ஹால் உங்களுக்கு நினைவிருக்கிறதா?" அவர் தலையை அசைத்தார். நான் சொன்னேன், "டாக்டர் அடேர், உங்களுக்குத் தெரியுமா..." சொல்லப்போனால், நான் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன்: மறுநாள் காலையில், அதே காலையில் நான் டாக்டர் அடேரை அழைத்தேன். நான் சொன்னேன், "டாக்டர், கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறார் என்று நீங்கள் சொன்ன அந்த மனிதர் உயிர் வாழப் போகிறார்." அவர் கேட்டார், "பில்லி, நீ என்ன சொன்னாய்?" நான் சொன்னேன், "அவர் உயிர் வாழப் போகிறார்." அவர் கேட்டார், "கல்லீரலில் புற்றுநோயுடன் அவர் எப்படி உயிர் வாழப் போகிறார்?" நான் சொன்னேன், "எனக்குத் தெரியாது. ஆனால் அவர் உயிர் வாழப் போகிறார்." 28 சரி, அவர் என்னை பல நோயாளிகளிடம் அனுப்பியிருக்கிறார்; நீங்கள் இன்றிரவு அவரை அழைக்கலாம். அவர் என்ன... அவருடைய கிளினிக் எங்கே கட்டப்படும் என்று கர்த்தர் அவரிடம் சரியாகச் சொன்னார், அங்கே என் அறையில், எங்கே என்று அவரிடம் சொன்னார்... அவர் சொன்னார், "அது நடக்காது, பில்லி; அவர்கள் அந்த கிளினிக்கை அங்கே கட்ட முடியாது." அவர் கூறினார், "நான் அதை இப்போதுதான் சட்டத்தின் மூலம் எடுத்துள்ளேன், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அவர்கள் அந்த நிலத்தைத் தொடக் கூட முடியாது." நான் சொன்னேன், "நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன், அது ஒரு சிவப்பு செங்கல் கட்டடம்." அவர் சொன்னார், "அந்த விளக்க அமைப்பில்தான் நான் கட்ட விரும்புகிறேன்." நான் சொன்னேன், "அது மேப்பிள் மற்றும் மார்க்கெட் தெருவின் மூலையில் சரியாக அமைந்துள்ளது, அதாவது வால் மற்றும் மார்க்கெட் தெரு என்று சொல்கிறேன்." அவர் கூறினார், "பில்லி, அது நடக்காது, அன்பே." அவர் சொன்னார், "நான்-நான் உன் வார்த்தையை விவாதிக்க விரும்பவில்லை," ஆனால் சொன்னார், "அது நடக்காது." நான் சொன்னேன், "டாக்டர், தேவன் சொன்னதை விவாதிக்காதீர்கள். நீங்கள் போய் அதைக் கேளுங்கள்." அவர் சொன்னார், "சரி, நீங்கள் சொல்வது சரிதான் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்." 29 மறுநாள் காலையில் அவர் என்னை அழைத்தார், அவர் கூறினார், "கேள், என் உடலெல்லாம் நடுக்கம் ஏற்படுகிறது." அவர் சொன்னார், "நேற்றிரவு பாஸ்டனில் அவர்களுக்கு ஒரு கூட்டம் நடந்தது உனக்குத் தெரியும், இன்று காலையிலேயே நான் அந்த நிலத்தை வாங்கிவிட்டேன்." ஆகையால்... எனவே அவர்-அவர் சொன்னார், "நான் ஒருபோதும் உன்னை சந்தேகிக்கவில்லை," ஆனால் கூறினார், "இந்தப் பழைய மருத்துவர் அது நடப்பதைப் பார்க்க வேண்டும்." அவர் கேட்டார், "அது எப்போது நடக்கப் போகிறது?" நான் சொன்னேன், "எனக்குத் தெரியாது." ஆனால் நான் கூறினேன், "அவர் மரிக்கப்போவதில்லை என்று அவர் என்னிடம் சொன்னார். அவர் உயிர் வாழப்போகிறார்." நான் சொன்னேன், "நான் அதற்காக என் உயிரையும் பணயம் வைப்பேன், அது அப்படித்தான் நடக்கும் என்று கூறுவேன்." அவர் கூறினார், "சரி, இந்தப் பழைய மருத்துவர் அதைப் பார்க்க வேண்டும்." நான் கூறினேன், "சரி, நீங்கள் அதைப் பார்க்கும் வரை முதுமையால் மரிக்க மாட்டீர்கள்," நான் சொன்னேன், "ஏனென்றால் அது நடக்கப்போகிறது." 30 அன்று இரவு, நான் அவரிடம் சொன்னேன், "மூன்று நாட்களில்-அல்லது நான்கு நாட்களில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் அந்த மனிதர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்டேன். அவர் சொன்னார்... "ஆம்" என்று தலையசைத்தார். நான் கேட்டேன், "சகோதரர் ஹால், நீங்கள் சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா?" அவர் கூறினார், "தேவனுக்கு மகிமை." அவர் கேட்டார், "நான் சாட்சி சொல்ல வேண்டுமா?" அவர் சொன்னார், "சகோதரர் பிரன்ஹாம், நான்... இந்த ஆறு வார காலத்தில் நான் கிட்டத்தட்ட நாற்பது பவுண்டுகள் எடை கூடியிருக்கிறேன்." "என்னை பாருங்கள்" என்று அப்படிச் சொன்னார். எனவே மருத்துவர் அன்று இரவு அவரை வெளியே அழைத்துச் சென்று, மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார், தங்களுக்குத் தாங்களே அதை நிரூபிப்பதற்காக அவரைப் பரிசோதித்தனர். அதன் அறிகுறி சிறிதும் இல்லை. வில்லியம் ஹால் நாளை மில்டவுன் பாப்டிஸ்ட் சபையில் பிரசங்கிக்கிறார். அவர் நூற்று எண்பத்தைந்து பவுண்டுகள் எடையுடன், பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அது நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. பாருங்கள்... தேவனுடைய நற்குணத்திற்காக அவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 31 இப்போது, கிறிஸ்தவ நண்பரே, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். அவர் குணமடைந்ததில் எனக்கு ஏதாவது சம்பந்தம் இருந்ததா? ஒரு காரியமும் இல்லை. நான் அவனுக்காக ஜெபித்தபோதுகூட, அது பலனளிப்பது போல் தெரியவில்லை. அது தேவன் மேல் அவர் வைத்திருந்த விசுவாசம். நான் ஒரு செய்தியை மட்டுமே கொண்டு சென்றேன், தேவன் அவரிடம் சொல்லும்படி எனக்குச் சொன்னதை மட்டுமே செய்தேன். உங்களில் பலர் இந்தப் புத்தகங்களை வாசிக்கிறீர்கள். நாங்கள் புத்தக விற்பனை யாளர்கள் அல்ல. நாங்கள் அப்படி இருக்கவும் விரும்பவில்லை. நானே இந்தப் புத்தகங்களை வாங்குகிறேன். அவை வேறொருவரால் அச்சிடப்பட்டவை, அவர் இன்று இரவு இந்தக் கட்டடத்தில் அமர்ந்திருக்கிறார். இது அல்ல, இது கார்டன் லிண்ட்சே எழுதியது. ஆனால் மற்றொன்று, நான் அவற்றை நாற்பது சதவீத தள்ளுபடியில் வாங்குகிறேன். எனக்காக அவற்றை விற்பதற்கும், கூட்டங்களுக்கு அவற்றைக் கொண்டு வருவதற்கும் நான் ஒருவரை நியமிக்கிறேன். அது பணத்திற்காக அல்ல, அதை நீங்கள் காண்கிறீர்கள். அது, யாருக்காவது இது உதவும் என்று நான் நினைக்கிறேன். மேலும், அவர்கள் கேட்கும் விலைக்கு இது தகுதியானது என்று நான் நினைக்கவில்லை என்றால், நிச்சயமாக நான் அதை-சந்தைக்குக் கொண்டு வந்திருக்க மாட்டேன். ஆனால் இது மக்களுக்கு உதவுகிறது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இதைக் குறித்து என்னிடம் ஆயிரக்கணக்கான சாட்சிகள் உள்ளன. மேலும் அதை வைத்திருப்பதில் நான்-நான் மகிழ்ச்சிய டைகிறேன். 32 மேலும் ஆயிரக்கணக்கான சாட்சிகளைச் சொல்லலாம், ஆனால் இப்போது அதனால் என்ன? நமக்காக, இன்று இரவு இங்கே மற்ற வியாதியஸ்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திரு. ஹாலைப் போலவே மோசமான நிலையில் மரித்துக்கொண்டிருக்கும் இன்னும் பலரும் இருக்கிறார்கள். நேரம் கிடைக்காது... அடுத்த வாரத்திற்குப் பிறகு இதே நேரம் வரை நான் நின்றுகொண்டு சாட்சி சொல்ல முடிந்தாலும், நமது கர்த்தராகிய இயேசு செய்த காரியங்களின் சாட்சிகளை நான் ஒருபோதும் சொல்லி முடிக்க முடியாது. அவர் அற்புதமானவர். கிறிஸ்தவ நண்பர்களே, நாம் ஏன் அமர்ந்திருக்கிறோம்? ஏன் நாம் இப்படி அலட்சியமாக அமர்ந்திருக் கிறோம்? நாம் உண்மையாக இருப்போம். நமது கர்த்தரை விசுவாசிப்போம். கல்வாரியில் அவருடைய மரணத்தை நாம் மதிப்போம். இன்று இரவு அவருடைய முதுகில் உள்ள அந்தத் தழும்புகளை நாம் மதிப்போம். நாம் அவற்றைப் பார்ப்போம். அந்த குளிரான நாளில், பேதுரு எதிரியின் நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த போது, அவர் சுருண்டு துடித்துக் கொண்டிருந்ததும், அவருடைய முதுகில் இரத்தம் வழிந்தோடி யதையும், என்னால் மறுக்க முடியாது. அந்தப் பெரிய கசையடிகள் அவருடைய விலா எலும்புகள் வெளியே தெரியும் வரை அவருடைய முதுகின் குறுக்கே தாக்கிய போது, நான் எப்படிச் சொல்ல முடியும்... 33 நான் கல்வாரிக்குச் செல்வதைப் பார்க்கிறேன்; எருசலேம் வழியே ஒருவர் செல்வதை நான் காண்கிறேன். அவர்-தையல் இல்லாமல் முழுமையாக நெய்யப்பட்ட ஒரு அங்கியைக் அணிந்திருக்கிறார். அதிலெல்லாம் ஏன் அந்த சிறிய சிவப்புப் புள்ளிகள் இருந்தன என்று நான் ஆச்சரியப்படுகிறேன்? சிறிது நேரத்திற்குப் பிறகு, அவை பெரிதாகத் தொடங்குகின்றன. அந்தச் சிறிய புள்ளிகள் அனைத்தும் கடைசியாக ஒன்றாய் சேர்ந்து கொள்கின்றன. அது ஒரு பெரிய இரத்தக் கறை படிந்த அங்கி. அது அவருடைய கால்களைச் சுற்றி அடிப்பதை நான் கேட்கிறேன். அது என்ன? பலியிடப்படுவதற்காகக் கல்வாரிக்குச் சென்று கொண்டிருந்தது தேவ ஆட்டுக்குட்டி. அவர் மரிக்க வேண்டியதாயிற்று, ஏனெனில் மரணத்திலிருந்தே ஜீவன் வருகிறது. நீங்கள் அதைக் கேட்டீர்களா? மரணத்திலிருந்து மட்டுமே... "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்." செத்ததேயாகில், அது ஜீவனை உருவாக்கும். 34 நித்திய ஜீவனை உருவாக்குவதற்கு இயேசு மரிக்க வேண்டியதாயிற்று. இப்போது, கிறிஸ்தவ நண்பர்களே, உன்னிப்பாகக் கவனியுங்கள். நீங்கள் உங்களுக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் மரித்து, தேவனுடைய வார்த்தையின்படி செயல்படாவிட்டால், நீங்கள் ஒருபோதும் ஜீவனைக் கொண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் உணர்வுகளை மறந்து விடுங்கள்; தேவன் சொன்னதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் சொந்த மரணம் அல்லது உங்கள் சொந்த மரணம் என்ற அந்த வாழ்க்கையில் அந்த விதையை விதையுங்கள், அங்கிருந்து ஜீவன் உருவாக்கப்படும், நீங்கள் பிழைப்பீர்கள். பார்த்துப் பிழைப்பாய், என் சகோதரனே, பிழைப்பாய். இப்போதே இயேசுவைப் பார்த்துப் பிழைப்பாய். ஏனெனில் அது அவருடைய வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது, அல்லேலூயா. நீ பார்த்துப் பிழைக்க வேண்டும் என்பதே அது. 35 [ஒலி நாடாவில் காலியிடம்] ...நாம் நமது தலைகளைத் தாழ்த்துவோம். பிதாவே, இன்று இரவு உம்முடைய குமாரனுடன்கூட கல்வாரியின் பந்தங்களில் எங்களை ஏற்றுக் கொள்வீராக. எங்கள் சொந்த வாழ்க்கையையும் நாங்கள் யாராக இருக்கிறோமோ அது அனைத்தையும் நாங்கள் வெறுத்துவிடுகிற படியால், அது ஒன்றுமில்லாதது என்று நாங்கள் வெறுத்துவிடுகிறோம். நீர் எங்கள் இருதயத்தைத் துடிக்கச் செய்யாமலும், எங்கள் நுரையீரல்களை இயக்காமலும் எங்களால் சுவாசிக்கக் கூட முடியாது. நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இருப்போம். நீர் இல்லாமல் நாங்கள் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது. பிதாவே, நாங்கள் உம்மை தவறாக நடத்தியிருக்கிறோம் என்று அறிக்கை யிடுகிறோம். நீர் எங்களுக்காகச் செய்திருப்பதை நாங்கள் பார்க்கும்போது, எங்கள் இருதயங்கள்-எங்கள் வாழ்க்கையைக் குறித்து நாங்கள் வெட்கப்படுகிறோம், எங்களைக் குறித்தும் எங்கள் சிறிய விசுவாசத்தைக் குறித்தும் நாங்கள் வெட்கப்படுகிறோம். இப்போது எங்களை மன்னியுங்கள். மேலும் அன்று காலை வந்து சகோதரர் ஹாலைப் பற்றிச் சொன்ன அந்த தேவ தூதன், நான் வாழ்ந்த இந்த வாழ்க்கை முழுவதும் இந்த எல்லா காரியங்களையும் செய்தவர்... அவரை இன்று இரவு இந்த மேடைக்கு நீர் அனுப்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 36 மேலும் இங்கே வருபவர்கள் அனைவரும், அல்லது இந்தக் கட்டடத்தில் எங்கு இருந்தாலும் சரி, அவர்கள் இன்று இரவு அவருடைய வல்லமையால் குணமடையட்டும். அவர்களுடைய விசுவாசம் கட்டவிழ்க்கப்பட்டு, அங்கே பார்த்து விசுவாசித்து, "நாங்கள் விசுவாசிப்பதற்காக தேவன் இன்னும் என்ன செய்ய முடியும்?" என்று அவர்கள் சொல்லட்டும். மேலும் பாவிகள் அனைவரும் இரட்சிக்கப்படட்டும். பின்வாங்கிப் போனவ ர்கள் தேவனிடம் திரும்பி வரட்டும். பிதாவே, உம்முடைய அடியானின் ஜெபத்தைக் கேட்டருளும். ஏனெனில் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக என்னை மன்னிக்கவும். என் நல்ல சகோதரரான சகோதரர் ஷாரிட்டின் தாயார் அங்கே அமர்ந்திருப்பதை நான் காணத் தவறி விட்டதையும் நான் கவனித்தேன். சகோதரி ஷாரிட், உங்களை வரவேற்கிறோம். சிறிய ரூத்தி எங்கோ இருக்கிறாள் என்று நான் நம்புகிறேன். நான் இன்னும் அவளைப் பார்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக உங்கள் அனைவரையும் பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 37 பில்லி, நான் கேட்க முடியவில்லை... எனக்கு... நீ ஏதாவது கார்டுகளைக் கொடுத்தாயா? அவன்... பில்லி இன்று வெளியே சென்றிருந்தான், இன்னும் திரும்பி வரவில்லை. நான் அங்கே வெளியே வந்தபோது சகோதரர் ஷாரிட்டையும் அவர்களையும், ஜெஃபர்சன்வில்லியில் இருந்து வந்த நண்பர்களையும் சந்தித்தேன். அவன் கார்டுகளைக் கொடுத்தானா என்று அவனிடம் கேட்க மறந்துவிட்டேன். நீ என்ன கார்டுகளைக் கொடுத்தாய்? V ஆ? எவ்வளவு? எதிலிருந்து? ஒன்றிலிருந்து. சரி. கார்-ஜெப கார்டுகள் V வைத்திருப் பவர்கள்... அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்புதான் அவற்றைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். யாரிடம் ஜெப கார்டு V-1 இருக்கிறது? V-1? சரி. V-2? V-2? உங்கள் ஜெப கார்டின் பின்புறத்தைப் பாருங்கள். V-2? அதன் முன்புறத்தில் உங்கள் பெயரும் முகவரியும் இருக்கும், பின்புறத்தில் ஒரு-ஒரு எண்ணும் எழுத்தும் இருக்கும். ஜெப கார்டு V-2? யாராவது கூர்ந்து கவனியுங்கள், ஏனென்றால் அவர்கள் காது கேளாதவர்களாக இருக்கலாம், உங்களுக்குத் தெரியும். V-3? 3? V-4, 5, 6, 7, 8, 9, 10. சரி, V-10. இருக்கட்டும்... V-1 முதல் 10 வரை. என்னை மன்னிக்கவும். 38 (...அதைப் பற்றி என்ன?... சகோதரர் பாக்ஸ்டர். ஓ, புரிகிறது.) சரி, 10 முதல் 20 வரை. V-11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. இப்போது, உங்களைச் சுற்றிலும் பாருங்கள், உங்களுடன் இருக்கும் யாருக்காவது அதுபோன்ற ஒரு ஜெப கார்டு இருக்கிறதா என்று பாருங்கள், உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் எவரேனும் காது கேளாதவராகவோ அல்லது வேறு ஏதாவது நிலையில் இருக்கிறார்களா என்று பாருங்கள், ஏனென்றால் அவர்களால் நகர முடியாது... அங்கே ஒரு ஸ்ட்ரெச்சரில் இருப்பதை நான் பார்க்கிறேன். அவளிடம் என்ன ஜெப கார்டு இருக்கிறது என்று கவனமாகப் பாருங்கள். இயேசுவை நேசிப்பவர்கள் எத்தனை பேர்? உங்கள் கைகளைப் பார்ப்போம். ஓ, ஆச்சரியம். அவர் அற்புதமானவர் அல்லவா? மிகவும் இனிமையானவர், மற்றும் அன்பானவர், மற்றும் நேசமுள்ளவர், மற்றும் அக்கறையுள்ளவர், மற்றும் மன்னிக்கிறவர். மேலும் ஓ, நான்-நான்... உங்களுக்குத் தெரியும், இயேசு கிறிஸ்துவை அறிவது என்பது-அது ஜீவனை அறிவது. அது சரியா? மேலும் அது-அது ஒரு-ஒரு மனரீதியான காரியத்தை விட மேலானது. அது-அது உண்மையாகவே ஒரு அன்பு. ஓ, நீங்கள் அவரை நேசிக்கும்போது, எதற்கெடுத்தாலும் நீங்கள் அவரை விசுவாசிப்பீர்கள். 39 சரி. இப்போது, பார்ப்போம். இருபது உள்ளது... 21, 22, 23, 24, 25 முதல் 30 வரை அது V... நாம் எத்தனை பேரை வரிசையில் நிற்க வைக்க முடியும் என்று பார்ப்போம், அதன்பிறகு... இங்கு மிகவும் சூடாக இருப்பதற்கு மன்னிக்கவும். இது நிச்சயமாக இந்த வாரம் எங்கள் கூட்டத்தைப் பாதித்திருக்கிறது, ஆனால் பலர் குணமடைந்து வருகிறார்கள். தேவன் மகிமைப்படுகிறார், எனவே அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள்... உங்கள் பொறுமைக்கும், எங்களுக்காகக் காத்திருந்த அந்த அக்கறைக்கும் நன்றி, மேலும்... சரி, இப்போது. V 30 வரை, V 30 வரை, யாரிடமாவது V 30 வரை ஜெப கார்டு உள்ளதா. இப்போது, 30 முதல் 40 வரை உள்ளவர்கள் வாருங்கள்: V-30 முதல் 40 வரை. அங்கே இருக்கும் முடவனுக்கு யாராவது ஒரு நாற்காலியைக் கொண்டு வாருங்கள், அவர்கள் அதைச் செய்வார்களா மற்றும்... சரி. 30 முதல் 40 வரை: V-30 முதல் 40 வரை, அங்கே அதிகமானவர்கள் எழவில்லை. ஜெப கார்டு V-30 முதல் 40 வரை. 40 இப்போது, உங்கள் அருகில் இருப்பவர்களைச் சுற்றிப் பாருங்கள். அது அவனுடையதாகவோ அவளுடையதாகவோ இருக்கலாம் மற்றும் அவர்கள் காது கேளாதவர்களாகவும்-அல்லது இயலாதவர் களாகவும் இருக்கலாம். நீங்கள் ஜெப கார்டைச் சரிபார்க்கிறீர்களா... அங்கே இருக்கும் அந்தப் பெண்ணின் எண் என்ன? நீங்கள்... அங்கே ஒரு-ஒரு ஸ்ட்ரெச்சரில், அவள்...?... என்ன... சரி. 40 முதல் 50 வரை, ஜெப கார்டு V-40 முதல் 50 வரை. அங்கே உள்ள சிலருக்கு அவர்கள் ஒரு நாற்காலியை வைத்திருக்க வேண்டும், சகோதரர் போஸ், அது சரியாகப் பின்புறம் உள்ளது. அந்த மக்களில் சிலர்-நிற்பதில் சிரமப்படுகிறார்கள். ஓ, அவளிடம் இல்லை-அப்படியானால் அது ஜெப கார்டு இல்லை. சரி, என்னால் அவ்வளவு தூரம் கீழே செல்ல முடியுமா என்று பார்க்கிறேன். நான் பார்க்க விரும்புகிறேன்... நான்-ஒரே நேரத்தில் அதிகமானோர் நிற்பதை நான் விரும்பவில்லை. புரிகிறதா? சரி. இப்போது வரிசையாக நில்லுங்கள், அனைவரும் அங்கே இருக்கிறார்களா என்று பாருங்கள். அதன்பிறகு நாம் யாரையாவது தவறவிட்டோமா என்று பார்ப்போம். யாராவது இருந்தால், அவர்கள் தங்கள் எல்லா கார்டுகளையும் பெற்றிருக்கிறார்களா என்று மீண்டும் ஒருமுறை சரிபார்ப்போம். 41 இப்பொழுது, இயேசு கிறிஸ்துவோடு மிகவும் நல்ல ஜெப நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? பார்ப்போம். சகோதரர் ஆஸ்போர்ன் இன்று இரவு மீண்டும் இங்கு வந்திருப்பதிலும், மற்றும்-மற்றும் சகோதரர் போஸ், இன்று இரவு வியாதியஸ்தர்களுக்காக நான் ஜெபிப்பதற்கு உதவிசெய்யும் ஜெப வீரர்களாக இங்கே பின்னால் அமர்ந்திருப் பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இல்லை... எத்தனை? என்னை மன்னியுங்கள். 49 மற்றும் 50, கடைசி அழைப்பில் V-49 மற்றும் 50 வந்திருக்கிறது. V, உங்கள் ஜெப அட்டையைப் பாருங்கள்: V-49, 50. உங்கள் அருகில் இருப்பவர்களைப் பாருங்கள். எல்லோரிடமும் V-களின் ஜெப அட்டை இருக்கிறது. V-ஜெப அட்டை வைத்திருப்பவர்கள் யாராவது இருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். பிறகு நாம் அதைப் பெறலாம். V ஜெப அட்டை வைத்திருப்பவர்கள் யாராவது இருந்தால். இப்போது V, அதாவது வெற்றி (victory) என்பதில் வருவது போல. ஊ-ஹூம். அந்தப் பெண்மணியிடமா அது இருக்கிறது? என்ன... புரிகிறது. இப்போது எல்லாம் சரியா? அனைவரையும் கொண்டுவந்துவிட்டீர்களா? சரி, அது நன்று. 42 சரி. இப்போது, இங்கு ஜெப அட்டைகள் இல்லாமல், தங்களுக்காக ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்பு கிறவர்கள் எத்தனை பேர்? நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும், நான் வியாதியாய் இருக்கிறேன்" என்று சொல்வீர்களா? அது சரி. தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப் பாராக. அவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, விசுவாசம் வைத்து நம்புங்கள். இப்போது, நாம் அனைவரும்... இப்போது, யாருக்காவது தெரிந்தால்... அங்கு அமர்ந்திருக்கும், நிற்கும், சாய்ந்திருக்கும் ஐம்பது பேர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை, என் வாழ்வில் அவர்களில் ஒருவரைக் கூட நான் பார்த்ததில்லை என்பதை பரலோகத்தில் உள்ள தேவன் அறிவார். இப்போது, அந்த மக்களில் ஒருவரையாவது என்னால் குணமாக்க முடியுமானால், நான் நிச்சயமாகச் சென்று அதைச் செய்வேன். யாரையாவது என்னால் குணமாக்க முடியுமானால், நான் அதைச் செய்வேன். ஆனால் என்னால் முடியாது. அதைச் செய்யக்கூடிய வேறொரு நபரும் பூமியில் இல்லை. அதைச் செய்யக்கூடிய ஒரே ஒருவர் சர்வவல்லமையுள்ள தேவன் மட்டுமே. அவ்வளவுதான். 43 இப்போது, நாம் மக்களை குணமாக்கும் கல்லின் நேராக சுட்டிக்காட்ட முடியும். பழைய... பல வருடங்களுக்கு முன்பு அவர்களிடம் ஒரு பைத்தியக்கல் (madstone) இருந்தது. ஒருவரை வெறிநாய் கடித்தால், அவர்கள் அவர்களை அழைத்துச் சென்று இந்தக் கல்லில் ஒட்டி வைப்பார்கள். அவர்கள் ஒட்டிக்கொண்டால், பிழைத்துக்கொள்வார்கள். இல்லையென்றால், இறந்துவிடுவார்கள். இப்போது, இன்று இரவு நீங்கள் ஒட்டிக்கொள்ள வேண்டிய கல் கல்வாரி ஆகும். நேராக வந்து அதனுடன் ஒட்டிக்கொள்ளுங்கள், இயேசு கிறிஸ்து உங்கள் இருதயத்தில் விசுவாசத்தை உறுதிப்படுத்தி நீங்கள் முழுமையாகக் குணமடையும் வரை அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால் என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்... இப்போது, எத்தனை-எத்தனை பேர் அதை உங்கள் முழு இருதயத்தோடு நம்புகிறீர்கள்? அற்புதம். இப்போது, அது... அதை அறிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 44 இப்போது, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால், தமது உயிர்த்தெழுதலின் போது அவர் செய்த அதே காரியங்களை தமது சீஷர்களும் செய்வார்கள் என்று வாக்குத்தத்தம் அளித்தார் (அது சரியா?), மேலும் பெரியவைகளையும் செய்வார்கள் என்றார். இப்போது, "பெரியவைகள்" என்ற வார்த்தை தரத்தை குறிப்பதல்ல என்று நான் சொல்கிறேன். ஆனால் அது "அளவை" குறிக்கிறது. அது உலகம் முழுவதும் இருக்கும். சபை என்பது ஒரு உலகளாவிய சபை, எல்லா இடங்களிலும் உள்ளது. அவர் அவர்களுடனும் அவர்களுக்குள்ளும் இருப்பார் என்பதால் அவர்கள் இன்னும் பல காரியங்களைச் செய்வார்கள்... நிச்சயமாக அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர் என்ன... அவர் ஒரு குணமாக்குபவரா? கவனமாக இருங்கள். அவர் ஒரு குணமாக்குபவரா? இல்லை. அவர் சொன்னார்-அவர் சொன்னார், "என்னால் ஒன்றும் செய்ய முடியாது... நானாய் ஒன்றும் செய்கிறதில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்." அது சரியா? அவரே கிரியைகளைச் செய்தார், பிதாவே. 45 இப்போது, யோவான் சுவிசேஷத்தில் இயேசு, பெதஸ்தா குளத்தருகே கடந்து சென்றபோது என்று சொன்னார்... அங்கு முடவர்கள், குருடர்கள், மற்றும் உடல் வளைந்தவர்கள், நொண்டிகள் படுத்திருந்தார்கள். அவர் அவர்களில் யாரையும் குணமாக் கவில்லை. அவர் நேராகக் கடந்து சென்று ஒரு படுக்கையில் படுத்திருந்த ஒரு மனிதனைக் கண்டார். ஒருவேளை அவனுக்கு புரோஸ்டேட் பிரச்சனையோ அல்லது வேறேதோ இருந்திருக்கலாம். அவர் அவனைக் குணமாக்கி விட்டு, அங்கிருந்து நடந்து சென்று, அந்த முழு திரளான மக்களையும் விட்டுவிட்டார், ஆனாலும் அவர் மக்கள் மீது இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்தவர் என்று என்னிடம் சொல்கிறார்கள். ஆச்சரியம், இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்த ஒருவர், குளத்தில் இறங்க முயற்சிக்கும் வளைந்த, நொண்டி, குருட்டு மற்றும் சரீரம் சூம்பினவர்களைக் கடந்து செல்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அப்படியே அவர்களைக் கடந்து நடந்தார். அவர் எங்கிருக்கிறார் என்று தாம் அறிந்திருந்த ஒரு மனிதனிடம் சென்று, அவனைக் குணமாக்கிவிட்டு அந்த முழு கூட்டத்தையும் விட்டுவிட்டார்... 46 அது எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். ஒருவேளை மூட்டுவலியால் முடங்கிய ஒரு ஏழை வயதான தந்தை அங்கு நின்று, "யாராவது என்னை குளத்தில் இறக்கிவிடுங்கள். யாராவது எனக்கு உதவுங்கள்" என்று சொல்லியிருக்கலாம். இயேசு அவனைக் கடந்து சென்றார்: இம்மானுவேல், வல்லமை நிறைந்த வஸ்திரங்கள். அவர் இந்த ஒரு மனிதனைக் குணமாக்கிவிட்டு உடனே நடந்து சென்றார், அங்கு படுத்திருந்த அந்த முழு கூட்டத்தையும் விட்டுவிட்டார். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்கள். யூதர்கள் அவரைக் கேள்வி கேட்டார்கள், அதே அதிகாரத்தின் 19-வது வசனம். அவருடைய வார்த்தைகளைக் கேளுங்கள், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன் றையும் தாமாய்ச் செய்யமாட்டார். என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன்." அது சரியா? அப்படி யானால் அவருடைய சொந்த வார்த்தையின்படி, பிதா என்ன செய்கிறார் என்பதின் தரிசனங்களை அவர் கண்டார். 47 இப்போது, அநேகர் குணமடைந் துள்ளனர். ஒருமுறை சில குருடர்கள், தெருவில் அவருக்குப் பின்னால் ஓடிவந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் வந்தார்கள், அவர் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. பிறகு அவர் அவர்கள் கண்களைத் தொட்டு, "உங்கள் விசுவாசத்தின்படி (என்ன?) உங்களுக்கு ஆகக்கடவது" என்றார், தரிசனம் இல்லை. ஒரு பெண் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; அவர்-அவர் திரும்பி, "நான் அவளைக் குணமாக்கவில்லை. அவளைப் பற்றி நான் எந்த தரிசனமும் காணவில்லை" என்று சொன்னார். காண்கிறீர்களா? "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது." அது சரியா? பிசாசு பிடித்த குழந்தையைக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும், அது அப்படித்தான் இருந்தது. சரி இப்போது, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயி ருக்கிறார் என்றால், அவர் தமது சபையில் வாழ்ந்து, அதே காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார். அது சரியா? "எதற்காக இதைச்... சொல்கிறீர்கள், சகோதரர் பிரன்ஹாம்?" கர்த்தர் உரைக்கிறதாவது என்பதின் அடிப்படையில்தான் இதை நாம் முற்றிலுமாக அமைத்திருக்கிறோம் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவே. இது வேதவாக்கியம். 48 இப்போது, அஸ்திபாரத்தின் மீது கட்டப்படாத பல மூடநம்பிக்கைகளும், காரியங்களும், மற்றும்-மற்றும் சிறிய மனோதத்துவ அசைவுகளும் மற்றும் பலவும் இருக்கின்றன. ஆனால்... இது வேதப் பூர்வமானது, என் அன்பு நண்பரே, தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில்: "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்." காண்கிறீர்களா? சரி. இப்போது, நான் அவர் அல்ல. அவர் இந்தக் கட்டடத்திற்குள் இருக்கிறார். அவர் இங்குள்ள ஒவ்வொரு நபருக்குள்ளும் இருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ள அந்தப் புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருக் கிறீர்கள்? உங்கள் கைகளைப் பார்ப்போம். கர்த்தருடைய தூதரின் ஒரு புகைப்படம் இருக்கிறது. இப்போது, அது... சரி, ஏதேனும் ஒரு நாள் இரவு நான் அதைப் பற்றிய கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டும், ஒருவேளை சில புகைப்படங்களையும் கொண்டுவர வேண்டும். என் கருத்தின்படி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து கானானுக்கு வழிநடத்திய அதே அக்கினி ஸ்தம்பம்: "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயி ருக்கிறார்," பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய இரண்டும். அவர் அதேபோல்தான் இருக்கிறார். தேவன் மூன்று நபர்கள் அல்ல. அது ஒரு-அது நீங்கள் வெளிப்படுத்தும் ஒரு மூன்று அடி அளவுகோல். பிதாவாகிய அதே தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார், இப்போது பரிசுத்த ஆவியானவரில் இருக்கிறார். அதனால்தான் ஞானஸ்நானம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் கொடுக்கப்படுகிறது (காண்கிறீர்களா?) திரித்துவம்-திரித்துவம், மூன்று தேவர்கள் அல்ல, ஆனால் ஒரே தேவனில் மூன்று நபர்கள், ஒரு... மூன்று தேவர்கள்... மூன்று காலக்கட்டங்களில் ஒரு நபர். காண்கிறீர்களா? 49 சரி. பாவத்தை நீக்குவதற்காக அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார். பரிசுத்த... அவர் மக்களுக்கு மேலுள்ள ஒரு புனிதமான ஒளியிலிருந்து, மக்களை மீட்க ஒரு பரிசுத்த சரீரத்திற்குள் இறங்கி, பின்னர் மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்குள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் சொல்வது புரிகிறதா? அதே தேவன். எனவே இன்று, இயேசு நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருந்தால், அதே பிதாவானவர், அதே வழியில் தொடர்ந்து செயல்படுகிறார். சரி. தயவுசெய்து, அந்தப் பெண்மணியை அழைத்து வாருங்கள். இப்போது, இந்தப் பெண்மணி இன்று இரவு இங்கு வருகிறார். இப்போது, ஒரு நிமிடம். நாம் அநேகருக்காக ஜெபிக்க நேர்ந்தால், அவர்கள் குணமாவதைத் தடுக்கும் ஏதேனும் பாவம் அல்லது வேறு ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, முதல் சில இரவுகளில் ஒவ்வொரு நபரையும் அழைத்து அவர்களை மிக நன்றாக ஆராய்ந்து பார்த்தோம். 50 அப்படி இருந்திருந்தால், நீங்கள் அவர்கள் மேல் எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும், அந்தப் பிசாசு அங்கேயே தங்கிவிடும். அந்த விஷயங்களில் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கதைகளை என்னால் சொல்ல முடியும். ஆனால், பாருங்கள், நீங்கள் செய்ய வேண்டிய காரியம், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவன் ஒருவர் மீது ஒரு சாபத்தை வைத்திருந்தால், அந்த ஆத்துமா மனந்திரும்பாமல் நீங்கள் வந்து அதை அகற்றினால், பாருங்கள், மோசே கன்மலை யைப் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக அதை அடித்தபோது செய்ததைப்போல நீங்கள் செய்திருப்பீர்கள். காண்கிறீர்களா? இப்போது, அதுதான் காரணம்... ஆனால் பலமுறை நாம் மக்களுக்காக ஜெபித்துவிட்டு, அதை அவர்களின் விசுவாசத்திடமே விட்டு விடுகிறோம். அவர்கள் எதை நம்புகிறார்களோ, ஏன், அது அவர்களைப் பொறுத்தது. அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்கிறோம். ஏனென்றால் சில இரவுகளுக்குப் பிறகு நான் மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் ஆகிவிடுகிறேன். உங்களுக்குத் தெரிந்திருந்தால், கடந்த இரண்டு இரவுகளில், நான் ஒவ்வொரு முறையும் சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தூங்கினேன். காண்கிறீர்களா? அது என்னை அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு, மிகுந்த பதட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டது. இங்கே உங்கள் சிறிய பியானோ வாசிப்பவர், நேற்றிரவு மண்டபத்தில் என்னைச் சந்தித்து, "சகோதரர் பிரன்ஹாம்," "நீங்கள் எதற்காக இவ்வளவு பதட்டமாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதை விளக்க முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அதைச் செய்வதற்கு எந்த வழியும் இல்லை. 51 வாருங்கள், அம்மா. நாம்-நாம் அந்நியர்கள் என்று நினைக்கிறேன், அப்படித்தானே? ஓ, நான்... நீங்கள் இதற்கு முன்பு ஜெப வரிசையில் இருந்திருக்கிறீர்களா? எந்த இடத்தில்? ஹம்மண்ட், இந்தியானாவில். எதற்காக? நரம்புத் தளர்ச்சிக்காகவா? ஊ-ஹூம். நல்லது, அது நன்று. சரி. அப்படியானால் சரியாக... நாம் சரியாக அந்நியர்களாக இருக்க மாட்டோம். ஓ, நான்-நான் அதை நினைவில் வைத்திருக்கவில்லை, அவ்வளவு நீண்ட காலமாக. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்காது. ஆனால் அது உங்களை விட்டுப் போய்விட்டது, உங்கள் நரம்புத் தளர்ச்சி, அப்படித்தானே நினைக்கிறேன்? அது நல்லது. அது நன்று. இப்போது, இன்று இரவு நீங்கள் வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். மேலும் அதை நீங்கள் நம்புகிறீர்களா... நிச்சயமாக, இயேசு கிறிஸ்து இறங்கி வந்து உங்களிடமிருந்து ஒரு நரம்புத் தளர்ச்சி நிலையை அகற்றுவதை நீங்கள் பார்த்திருந்தால், அதே கர்த்தராகிய இயேசு இப்போது உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அதை அகற்ற முடியும். அது சரியா? அவர் உங்களைக் குணமாக்க முடியும். அப்படியானால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இன்று தமது சபையில் வாழ்கிறார் என்று நம்புகிறீர்களா? நீங்கள் அதை நம்புகிறீர்கள். சரி. 52 நிச்சயமாக, இப்போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும். அது தேவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அவர் அதை எனக்கு வெளிப்படுத்த முடியும், அதை நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் அதை மனதோடு மனம் பேசும் நிலை என்றோ அல்லது... என்று நினைக்க மாட்டீர்கள், இல்லை, அது தேவனுடைய ஆவியானவர் என்று நீங்கள் நம்புவீர்கள். அது சரியா? அதனால்தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். நன்றி. பாருங்கள், நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இயேசு சமாரியப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்ததைப் போலவே, இது ஒரு சரியான உதாரணம். அவர் சொன்னார்... அவள் சொன்னாள், "இப்போது, ஏன், நீங்கள் ஒரு யூதனாயிருந்து சமாரியப் பெண்ணாகிய என்னிடம் (இரண்டு வெவ்வேறு இன மக்கள்) ஒரு உதவி கேட்கிறீர்கள்?" சரி, அவர்களுக்குள் அப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஏதும் இருக்கவில்லை. அவர் சொன்னார், "ஆனால் நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீயே என்னிடம் குடிக்கக் கேட்பாய்." இப்போது, அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? என் கருத்தின்படி, அவர் அவளுடைய ஆவியைத் தொடர்பு கொண்டு இருந்தார். காண்கிறீர்களா? நீங்கள்-நீங்கள் ஒரு இயற்கையான ஜீவன் என்பதைப் போலவே ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவனாகவும் இருக்கிறீர்கள். உயிர் உங்களை விட்டுச் செல்கிறது. அது செல்வதை யாரும் பார்ப்பதில்லை, ஆனால் அது செல்கிறது. நீங்கள் இனி செயல்படுவதில்லை. அதுதான் உங்கள் ஆவி. 53 இப்போது, அந்த விஷயத்தைத்தான் தேவனுடைய ஆவியானவர் மூலமாக, நான் உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். காண்கிறீர்களா? பின்னர் இயேசு, அவளுடன் பேசிய பிறகு, அவளுடைய பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதைச் சரியாகப் பார்த்தார். அவளுடைய பிரச்சனை எங்கே என்று அவர் அவளிடம் சொன்னார். அவள் ஊருக்குள் ஓடி, "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள்" என்றாள். ஏன், அவள் செய்த எல்லாவற்றையும் அவர் அவளிடம் சொல்லவில்லை. அவள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தாள் என்பதை மட்டுமே அவர் அவளிடம் சொன்னார். மற்றும்... ஆனால் பிதா அவருக்குக் காண்பித்திருந்தால், அவர் அவளிடம் சொல்லியிருக்க முடியும், அது சரியா? அது சரி. இப்போது, இது சரியாக அதே சம்பவத்தின் மறுநிகழ்வு (காண்கிறீர்களா?), இன்று இரவு நாம் இங்கே ஒன்றாக நின்று கொண்டி ருக்கிறோம்: இரண்டு வெவ்வேறு தேசத்து மக்கள், நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா, கிறிஸ்து பட்சபாதம் உள்ளவர் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, பழைய கரடுமுரடான ஒரு சிலுவை எருசலேம் வழியே கீழே வந்தது, அதைச் சுமப்பவரின் பாத... கால்தடங்களை இழுத்துச் சென்றது. மலையை நோக்கிச் செல்லும் வழியில், அவருடைய சிறிய பலவீனமான சரீரம் விழுந்தது. சிரேனே ஊரானாகிய சீமோன் வந்து, சிலுவையைச் சுமக்க அவருக்கு உதவினான். அவர் அதை நினைவுகூருகிறார். அது அவருக்குத் தெரியும். 54 உங்களைச் சுற்றி ஒரு உண்மையான இருண்ட தோற்றம் இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் ஏதோ ஒருவிதமான ஒடுக்குமுறையினால் அவதிப்படுகிறீர்கள், ஒரு பிசாசு உங்களைத் தொந்தரவு செய்கிறது. அது உண்மைதானே? நீங்கள் வேட்டையாடப்படுகிறீர்கள். ஏதோ ஒன்று உங்களை எப்போதும் வேட்டையாடுவது போல் இருக்கிறது. அதனால் முடிந்தால் அது உங்களை பைத்தியமாக்கிவிடும். இதோ மற்றொரு விஷயம், அம்மா. உங்களுக்கு உண்மையிலேயே தேவையானது இயேசு கிறிஸ்துவே. நீங்கள்-நீங்கள்-நீங்கள் அவரை நம்புகிறீர்கள். உங்களுக்கு அவர்மீது நம்பிக்கை இருக்கிறது, ஆனால் நீங்கள் உண்மையிலேயே வெளிப்படையாக வந்து, நீங்கள் அவரை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டிய விதத்தில் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அது உண்மைதானே? ஆம். பாருங்கள் நீங்கள்... இப்போது, உங்களைக் குணமாக்க, என்னால் முடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையை, உங்களால் மறைக்க முடியாது. நீங்கள் காண்கிறீர்களா? அது அங்கு நெருக்கமான விளிம்பில் இருந்தது. ஆனால் நான்-தேவனுடைய ஆவியானவர் அசையும் விதத்தை என்னால் பார்க்க முடிகிறது. அது உண்மையா? அது... அது உண்மை. இப்போது, இந்த மக்கள் கூட்டத்திற்கு முன்பாக நீங்கள் இந்த நேரத்தில் அவரை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவனுடைய உதவியுடன் இன்றிரவு முதல், உங்களது மீதமுள்ள நாட்களில் உங்களுக்குத் தெரிந்தவரை சிறந்த விதத்தில் அவருக்காக வாழ்வீர்கள் என்று வாக்குக்கொடுப்பீர்களா? நீங்கள் அப்படிச் செய்தால், தேவனுடைய உதவியால், நான் அந்தத் தீய காரியத்தை உங்களை விட்டு விலகச் செய்வேன், அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது. நீங்கள் வாக்குக்கொடுப்பீர்கள். இங்கே வாருங்கள். 55 இப்போது, உங்கள் தலையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். இப்போது, இது ஒரு விசித்திரமான வழக்கு. இப்போது, இதே உணர்வை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நான் அழைப்பதை நீங்கள் கேட்கும் வரை உங்கள் தலையைத் தாழ்த்தியே வைத்திருங்கள். இப்போது, ஆண்டவரே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் காரணரே, எல்லாக் நல்வரங்களையும் அளிப்பவரே, இன்று இரவு இங்கே நிற்கும் இந்தச் சிறிய பெண்மணிக்கு இரக்கமாயிரும். இந்த மக்கள் கூட்டத்திற்கு முன்பாகத் தாழ்மையுடன் மனந்திரும்பி, தன் தவற்றை அறிக்கையிட்டிருக்கிறாள். எல்லாவற்றையும் அறிந்த, இங்கே இருக்கிற தேவனுடைய ஆவியானவரிடமிருந்து அவளால் மறைக்க முடியவில்லை. ஆனால் அவள் தாழ்மையுடன் அறிக்கையிட்டாள். மற்ற வியாதியிலிருந்து அவள் குணமடைய நீர் அனுமதித்ததற்கும், அதன் பிறகும் ஒருபோதும் முழுமையாக உம்மிடம் திரும்பாததற்கும் அவள் வருந்துகிறாள். இப்போது, அவள் அப்போது இருந்ததை விட மோசமாக இருக்கிறாள். "அதிக கேடான தொன்றும் உனக்கு வராதபடிக்கு இனிப் பாவஞ்செய்யாதே" என்று எழுதியிருக்கிறதே. 56 இப்போது அவள் வந்து தன் பாவங்களை அறிக்கையிட்டு, உம்மைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளாள். இப்போது, இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, சகாப்தம் முழுவதும் விசுவாசிகளுடன் இருப்பதாக வாக்குத்தத்தம் அளித்த சர்வ வல்லமையுள்ள தேவனே, நான் உம்முடைய நாமத்தில் வருகிறேன். எனக்கு உதவும், ஓ தேவனே. மேலும் சாத்தானே, இந்தப் பெண்மணியை வேதனையின் விலங்குகளால் கட்டியிருக்கிற நீ. நீ அவளை ஒரு மனநல காப்பகத்தில் அடைத்து, மெத்தை தைக்கப்பட்ட அறையில் அவளை முட்டிக் கொள்ளும்படி செய்வாய். ஆனால் நீ உனது வெற்றியை இழந்துவிட்டாய். கல்வாரியில் மரித்த, உன்னையும் உன்னைச் சேர்ந்த அனைவரையும் ஜெயித்த இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதித்துவ நாமத்தில் நான் வருகிறேன். ஜீவனுள்ள தேவனாலும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இந்தப் பெண்மணியை விட்டு வெளியே வந்து, அவளை விட்டுவிடு. 57 இப்போது இங்கே பாருங்கள். நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள். இப்போது உங்கள் தலையை உயர்த்தலாம். இப்போது உங்களுக்குச் சரியாக உணர்கிறீர்களா? அது போய்விட்டது. இப்போது பாருங்கள், உங்களுக்கு ஒரு பயமுறுத்தும் உணர்வு இருந்தது, அல்லவா? அது முழுவதுமாகப் போய்விட்டது. அது உண்மை என்றால், மக்களிடம் உங்கள் கையை உயர்த்துங்கள். நீங்கள் குணமடைந்து இரட்சிக்கப்பட்டீர்கள். போ, இனிப் பாவஞ் செய்யாதே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக" என்று நாம் சொல்வோம். இந்த முழு கூட்டமும், ஒரே மனதுடன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இப்போதே விசுவாசிக்க வேண்டும். இந்தப் பெண்மணி வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு போதகர், இந்தப் பெண்மணியைச் சந்திக்க வேண்டும். அவள்... இப்போது, அவளுக்கு அடுத்துத் தேவையானது பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம். இப்போது-இப்போது, ஒவ்வொரு நபரும்... இங்கே உள்ள எந்த ஒரு நபரும் விசுவாசியாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இருக்காது. இப்போது, ஒரு வரிசையாக... எவ்வளவு... நீண்ட நேரம் எடுக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு சிலருக்கே, என்னால் செல்ல முடியாத அளவுக்கு நான் மிகவும் பலவீனமாகி விடுவேன். சில மக்களுக்காக நாம் வெறுமனே ஜெபிப்போம். அது சரியாக இருக்குமா? 58 இப்போது, உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் வாருங்கள் அம்மா. இப்போது, நீங்கள்... இப்போது கடந்து சென்ற பெண்மணியைப் போல... சரி, நான் ஜெபித்தால், தேவன் உங்களைக் குறித்து ஒரு காரியத்தைக் கூட எனக்குக் காட்டாவிட்டாலும், நீங்கள் எப்படியும் அவரை விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்கள். இப்போது நீங்கள் இயேசுவை, உங்களைக் குணமாக்குபவராக ஏற்றுக்கொள்வீர்கள், அது சரியா? இப்போது, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று இதோ. ஒரு கட்டிக்கான அறுவை சிகிச்சையை நீங்கள் நெருங்கி வருகிறீர்கள் என்று நான் காண்கிறேன். அது சரியா? ஆனால் நீங்கள் விசுவாசித்தால், அது-அது இப்போது உங்களை விட்டு விலகும். அவருடைய பிரசன்னத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நான் அதைச் சொன்னவுடனேயே, ஒரு விசித்திரமான உணர்வு உங்களைத் தாக்கியது. அப்போதுதான் அது விலகியது. தேவன் இப்போது உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்குச் செல்லுங்கள். ஆமென். 59 இப்போது, நான் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், வெறுமனே தேவனிடம் கேட்டு உங்களுக்காக ஜெபித்தால், எப்படியும் நீங்கள் குணமடைவீர்கள் என்று நம்புவீர்கள், அல்லவா? இப்போது, பிதாவே, உம்முடைய அன்பான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவள் குணமாக்கப்பட வேண்டும் என்று நான் கேட்கிறேன். ஆமென். இப்போது, விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். சந்தேகப்பட வேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். தேவன் அதை உங்களுக்கு அருளுவார். நீங்கள் வரும்போதே, அம்மா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? ஓ கர்த்தராகிய தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்தப் பெண்மணியின் மீது உமது சமாதானத்தை அனுப்பியருளும், அவள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குணமாக்கப்பட வேண்டும் என்று நான் கேட்கிறேன். ஆமென். இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள், தேவன் அதை உங்களுக்குச் செய்வார். சரி. இப்போது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீங்கள் ஒருபோதும் குருடாக மாட்டீர்கள். அவர் செய்வார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்... அவர்-அவர்... இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த மனிதனின் கண்களைப் பறிக்க முற்படும் குருட்டாறாட்டத்தின் ஆவி, நரம்புத் தளர்ச்சி மற்றும் ஒடுக்குமுறையின் இந்தப் பிசாசு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவனை விட்டு விலகுவதாக. ஆமென். இப்போது, இயேசுவிடமிருந்து உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக. 60 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, சகோதரியே? ஓ தேவனே, ஜீவனின் காரணரே, ஒவ்வொரு ஈவையும் அளிப்பவரே, இந்தப் பெண்மணியின் மீது சமாதானத்தையும் இரக்கத்தையும் அனுப்பி அவளைக் குணமாக்கியருளும், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். இப்போது உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துச் செல்லுங்கள். வாருங்கள், ஐயா. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, கர்த்தராகிய இயேசுவே, ஆடுகளின் பெரிய மேய்ப்பரே, இந்த மனிதன் மீது இரக்கத்தை அனுப்பியருளும். அவர் குணமாக்கப்படட்டும். வியாதியின் ஆவி அவரை விட்டு விலகுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய பார்வை சாதாரணமாகத் திரும்பட்டும். ஆமென். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். சரி. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, நீர் அவளைக் குணமாக்கும்படி இரக்கத்துக்காக நான் ஜெபிக்கிறேன். இன்று இரவு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவள் சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் மேடை யிலிருந்து செல்வாளாக. ஆமென். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்களா? சரி. சென்று மகிழ்ச்சியாயிருங்கள். 61 எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இப்போது, நீங்கள் இங்கே நடந்து வரும்போது, ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள்-நீங்கள் பதற்றமாக, கலக்கமாக இருக்கிறீர்கள். பார்க்கிறீர்களா? இப்போது, நீங்கள் அதை இப்போதே ஏற்றுக்கொண்டால், இயேசு கிறிஸ்து அதை உங்களிடமிருந்து எடுத்துப்போடுவார். நீங்கள் அதை செய்கிறீர்களா? அது உங்களுக்கு எல்லா நேரத்திலும் தொந்தரவையும் காரியங்களையும் ஏற்படுத்தியது. மேலும்-மேலும் அது வெறும்... அது உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும். அவர் அதை... சரியாக...? என்று கொடுத்து... கல்வாரியில் வைத்துவிட்டு, இயேசு கிறிஸ்துவின்...? உங்களுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு விலகி நடப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஜீவனின் அதிபதியாகிய தேவனே, என் சகோதரன் மீது இரக்கத்தை அனுப்பும், அவர் இன்றிரவு இங்கிருந்து சுகமாகச் செல்வாராக. தீமையானது அவரை விட்டு நீங்குவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். இப்போது, "நன்றி" என்று சொல்லிக் கொண்டே செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். ஆமென். நல்லது. 62 வாருங்கள், அம்மா. இப்போது எல்லோரும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, அந்த மக்கள், அவர்களுக்கு என்ன சொல்லப்பட்டாலும், அவர்கள்-அவர்கள் எப்படியும் சுகமடை கிறார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒவ்வொரு... பாருங்கள், நீங்கள் அந்த நபரிடம் சில நிமிடங்கள்தான் பேச முடியும், தரிசனங்கள். ஒவ்வொன்றும் என்ன தவறு என்பதைக் காட்டுகிறது. ஆனால் நீங்கள் மக்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றால்... இப்போது, நீங்கள் விரும்பினால், நாங்கள் ஜெபிக்கும்போது, உங்களால் முடிந்தவரை பயபக்தியாக இருங்கள். இப்போது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோதரி? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? இன்றிரவு தேவன் தமது மகிமையை இங்கே வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை செய்கிறீர்களா? உங்களுடைய விஷயத்தில் ஒரு விசித்திரமான காரியம் இருக்கிறது. நீங்கள்-நீங்கள் வேறொருவரைப் பற்றிக் கலக்கமாக இருக்கிறீர்கள். நீங்கள்... பற்றிக் கவலைப் படுகிறீர்கள். அவர் ஒரு ராணுவ வீரர் அல்லது அப்படிப்பட்டவர். அவர் ஒரு பையன், ஒரு இளைஞர். அது சரியல்லவா? மற்றும்... இப்போது, ஒரு நிமிடம். தயவுசெய்து, என்னை மீண்டும் பாருங்கள். ஆம். அவர்-அது ஒரு பையன், அது... 63 ஓ, அவர் இப்போது ஒரு ராணுவ வீரர் அல்ல. அவர் இருந்தார். மேலும் அவர்-அவர் கடல் கடந்து சென்றார், அவர் ஒரு கிறிஸ்தவனாகச் சென்றார். மற்றும் அவர்... கடல் கடந்து ஏதோ ஒன்று நடந்தது. அவருக்கு ஒரு-ஒரு விபத்து ஏற்பட்டது... இல்லை, வேறு யாரோ இருந்தார்கள். ஓ, அவருடைய நண்பன் அவனுடைய கைகளில் இறந்தான் அல்லது கொல்லப்பட்டான் அல்லது வேறு ஏதோ ஒன்று. பின்னர் அவர் திரும்பி வந்தார், அவர்... நான் ஒரு இளம் பெண்ணை, வேறு ஏதோ ஒன்றை, நிற்பதைப் பார்க்கிறேன்... ஓ, அது ஒரு-ஒரு பிரச்சினை. இப்போது, அந்தப் பையன் ஏறக்குறைய மனதளவில் பாதிக்கப்பட்டுவிட்டான். அது சரியா? அதுதான் உண்மையா? அப்படியானால், உங்கள் கையை உயர்த்துங்கள். அந்தப் பையனுக்கு நீங்கள் விடுதலையை விரும்புகிறீர்களா? இன்றிரவு அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் செய்வீர்களா? சர்வவல்லமையுள்ள தேவனே, இந்தப் பெண்ணின் மீது இரக்கமாயிரும். அவளுடைய விருப்பத்தை அவளுக்குத் தாரும். அந்தப் பெண் ஒருமுறை வந்து நம்முடைய கர்த்தராகிய இயேசுவிடம், "என் மகள் வீட்டிலே பிசாசினால் பலவிதமாக வேதனைப்படுகிறாள்..." என்று சொன்னது போல. அவர், "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்களுக்குப் போடுகிறது நல்லதல்ல" என்று சொன்னார். அதற்கு அவள், "மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்கள் தங்கள் எஜமானின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே" என்றாள். அவர், "போ, நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது" என்று சொன்னார். மேலும், ஓ இயேசுவே, உமது வார்த்தையை உறுதிப்படுத்த, இன்றிரவு எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவள் விசுவாசித்தபடியே அவள் சென்று அதைக் கண்டடைவாளாக. ஆமென். அந்தப் பையனுக்கான விடுதலையை இப்போது நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர் மீண்டும் இயேசு கிறிஸ்துவிடம் இரட்சிக்கப் பட்டு திரும்புவதையா? செல்லுங்கள், அப்படியே நீங்கள் கண்டடைவீர்களாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 64 எப்படி இருக்கிறீர்கள், சகோதரி? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? சிறுநீரகக் கோளாறிலிருந்து உங்களைக் குணமாக்கி உங்களைச் சுகமடையச் செய்வார் என்று? செல்லுங்கள்... அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆண்டவரே, நீர் அவளைச் சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு அது அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். தேவன் இப்போது உங்களை ஆசீர்வதிப்பாராக. சென்று... 65 நல்லது, வாருங்கள். ஆண்டவரே, இந்த மனிதன் மீது இரக்கமாயிரும், அவரைச் சுகமாக்கும் என்று நான் ஜெபிக்கிறேன். உமது இரக்கங்கள் அவர் மீது இருக்கும்படி அருள்புரியும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தத் தீயவனைத் துரத்திவிடும். ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடுமா? சமாதானத்தோடே போங் கள். தேவன் உங்களோடு இருப்பாராக. வாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு இருந்தது... அது ஒரு கரகரப்பான... அது ஒரு பிசாசு அல்லவா? இரவும் பகலும் உங்களை வெறுமனே வதைக்கிறது, சமாதானம் இல்லை, ஓய்வெடுக்க முடியவில்லை, வேறொன்று மில்லை. இரவில் அமைதியின்மை, தூக்கமே இல்லை... ஒரு நிமிடம். அங்கே பின்னால் ஒரு அம்மா உட்கார்ந்திருக்கிறார், இந்த வழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் அதே பிரச்சனைதான் இருக்கிறது: இரவில் அமைதியின்மை, தூக்கமின்மை. அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கிறார்... அந்தப் பகுதி அங்கே குறுக்கே கடக்கும் இடத்தில். பின்னால் இருக்கும் அம்மாவே, நீங்களும் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? 66 அப்படி நீங்கள் செய்தால், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் எழுந்து நிற்கலாம், அவரோடு நீங்களும் சுகமாக்கப்படலாம். உங்கள் முழு இருதயத் தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா, அந்த-அந்த நரம்பு தளர்ச்சி நிலையுடன் அங்கே உட்கார்ந்திருக்கும் சிறிய அம்மாவே? நீங்கள் அதை விசுவாசித்தால், அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால், அவருக்குக் கிடைக்கும் அதே நேரத்தில் உங்கள் சுகத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் சுகமாக்கப்படுவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? ஓ ஆண்டவரே, உமது இரக்கங்கள் இந்தப் பெண்ணின் மீது வருவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் சுகமாக்கப்படுவாளாக. ஆமென். இப்போது, பாருங்கள் அம்மா, நீங்கள் சுகமாக்கப்பட்டுவிட்டீர்கள். தேவனுடைய நற்குணத்திற்காக அவருக்கு நன்றி செலுத்தி, மகிழ்ச்சியோடு உங்கள் வழியில் செல்லுங்கள். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 67 எப்படி இருக்கிறீர்கள்? அந்த இதயம் மீண்டும் நன்றாகத் துடித்தால், நீங்கள் ஒரு மகிழ்ச்சியான பெண்ணாக இருப்பீர்கள், அல்லவா? அது நடக்கும் என்று விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, அவள் தாழ்மையுடன் தலைவணங்கும்போது, தேவனே, நீர் அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். உமது ஆவியானவர் அவளை முழுமையாக்குவாராக. ஒரு விசுவாசியாக நான் அவள் மீது கைகளை வைக்கும்போது, இந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்க, இயேசுவின் நாமத்தில் அவளுக்காக இரக்கத்தைக் கேட்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்களோடு இருப்பாராக. சகோதரர் மெக்டொவல், பார்க்க நிறைய உங்கள் அம்மாவைப் போலவே இருக்கிறார்கள், அல்லவா? பிதாவே, இந்தப் பெண்ணைச் சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு அவள் இங்கிருந்து மகிழ்ச்சியோடும், களிப்போடும், சுகத்தோடும் செல்வாளாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. களிப்போடு, மகிழ்ச்சியாகச் செல்லுங்கள். 68 நல்லது ஐயா, இப்போது வாருங்கள். உங்களுக்காக நான் தேவனிடம் கேட்டால் நீங்கள் சுகமடைவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, நீர் அவரை முழுமையாகச் சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர் மீது இரக்கமாயிரும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். உங்களுக்கு வயது என்ன? எழுபத்தி மூன்று. நிச்சயமாகப் பார்க்க எழுபத்தி மூன்று வயது போலத் தெரியவில்லை. சரி, அது அருமை. நீங்கள் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறீர்களா? ஆமாம் (Uh-huh). அவர் உங்களைச் சுகமாக்கிவிட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? அந்தக் காக்காய் வலிப்பிலிருந்து நீங்கள் விடுபட விரும்பு கிறீர்களா? தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். அவர் அவரைச் சுகமாக்கியபோது, அதே நேரத்தில் உங்களையும் சுகமாக்கினார். எழுந்து நில்லுங்கள், இளைஞனே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக. 69 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, நீர் அவளைச் சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு அவள் சென்று சுகமாக்கப்படுவாளாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, நீர் அவளைச் சுகமாக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இன்றிரவு அவள் இங்கிருந்து களிப்போடும் மகிழ்ச்சியோடும் செல்வாளாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். ஆமென். இப்போது, எல்லோரும் உங்களால் முடிந்தவரை பயபக்தியாக இருங்கள். ஏனென்றால், பாருங்கள், ஆவிகள் அலறி இரக்கத்திற்காகக் கெஞ்சுகின்றன. நீங்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை இரக்கத்திற்காகக் கெஞ்சுகின்றன. 70 ஒன்று மற்றொன்றை அழைக்கும். மற்றும் ஒன்று அழைக்கும்... நாம் ஜெபிக்கும்போது, கிறிஸ்தவர்களைப் போலவே, அது ஒரு-ஒரு தடுப்புச் சுவரைப் போல ஒன்றுகூடுகிறது. நீங்கள் ஜெபித்து என்னைப் விசுவாசிக்கும்போது... இயேசு தமது சொந்த ஊரில் எந்தப் பெரிய அற்புதங்களையும் செய்ய முடியவில்லை, ஏனென்றால் மக்கள் விசுவாசிக்கவில்லை. மேலும் எனக்கோ, அல்லது சகோதரர் ஆஸ்போர்னுக்கோ, அல்லது வேறு யாருக்கோ உங்களுக்கு உதவக் கூடிய ஒரே வழி, தேவனுடைய வார்த்தையின் ஊழியக்காரர்களாக எங்கள் மீது நீங்கள் விசுவாசம் வைக்கும்போதுதான். நீங்கள் எங்களை விசுவாசிக்க வேண்டும். மேலும் அந்தப் பிசாசுகள்... அவை ஒன்றையொன்று அழைக்கின்றன, அதுபோல. அவை அலறி இழுக்கின்றன. அங்கே வெளியே ஜெபித்துப் பாருங்கள் அது சரியில்லையா என்று. நிச்சயம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. வாருங்கள், அம்மா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் மிகவும் பதற்றமாக, கலக்கமாக இருப்பதை நான் காண்கிறேன். இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறீர்களா? என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இப்போது, அது... நான் அதைத் தாழ்மையோடு சொல்கிறேன். ஏனென்றால் நீங்கள் மக்களை உங்களை விசுவாசிக்கும்படியும் உண்மையுள் ளவர்களாக இருக்கும்படியும் செய்தால்... என்று தூதன் சொன்னார். 71 நாம் முற்றிலும் அறிமுகமில்லாதவர்களா, அம்மா? எனக்கு உங்களைத் தெரியாது, உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனால் தேவன் நம் இருவரையும் அறிவார். நாம் சாப்பிடும் எல்லா உணவையும், நாம் சுவாசிக்கும் காற்றையும் அவரே நமக்குக் கொடுத்தார். அது சரியா? நீங்கள் இப்போது அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மரிக்க வேண்டும். அது உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் உங்களுக்குப் புற்றுநோய் இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் புற்றுநோய் மார்பகத்தில் இருக்கிறது, அல்லவா? அது வலது மார்பகத்தில் இருக்கிறது, அது சரியா? இப்போது, ஒரு நிமிடம். அது மீண்டும் வருகிறது. இங்கே மற்ற புற்றுநோய் பாதிப்புகளும் இருக்கின்றன. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த அம்மாவுக்குத் தொண்டை புற்றுநோய் இருக்கிறது, அல்லவா, அம்மா? எழுந்து நில்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இருவரும் சென்று சுகம் பெறுவீர்களாக. சாத்தானே, அவர்களை விட்டு வெளியே வா, அவர்களைத் தனியாக விட்டுவிடு, பொல்லாத ஆவியே. ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறோம், ஏனென்றால் நாங்கள் தேவனுடைய சபையாயிருக்கிறோம், அவர்கள் மேல் உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர்களை விட்டு வெளியே வா. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்கள் மீது இருப்பதாக. 72 விசுவாசமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரி. இப்போது, உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள், ஏனென்றால் உங்கள் கீல்வாதம் இப்போது உங்களை விட்டு நீங்கிவிட்டது. உங்கள் கால்களை மேலே தூக்கி கீழே மிதியுங்கள். அதோ பாருங்கள். இப்போது, நீங்கள்... ஆமென். ஆமென். நல்லது. உங்களால் முடியுமா... நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எவ்வளவு காலமாக நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? பல வருடங்களாக. எது? இது ஒருவேளை... நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அது... ஒருவேளை-ஒருவேளை தேவன் உங்கள் பார்வையை உங்களுக்குக் கொடுத்து உங்களை மீண்டும் சாதாரண நிலைக்குக் கொண்டுவந்தால்... கர்த்தராகிய இயேசுவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பிசாசு இந்தப் பெண்ணை விட்டு நீங்குவதாக. அவள் வீட்டிற்குச் சென்று சுகமடைவாளாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். இப்போது, நான் ஏன் அந்தப் பெண்ணிடம் பேசினேன் என்று நீங்கள் கேட்கலாம். அந்தப் பெண்... ஒரு தரிசனத்தில் அவளைப் பார்த்தேன், அவள் இங்கே வந்து இந்த மேடையின் மேல் முழங்கால்படியிட்டு சுகமடைய வேண்டும் என்று (அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள், அம்மா?), உங்கள் கீல்வாதத்திலிருந்து. அதற்கான ஒரு வாக்குத்தத்தம் உங்களுக்கு இருந்தது, நீங்கள் வந்து அங்கே முழங்கால்படியிட்டால், நீங்கள் சுகமாக்கப்படுவீர்கள் என்று. அது முற்றிலும் உண்மை. ஆமென். பார்க்கிறீர்களா? 73 தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார். மரித்தோரிலிருந்து எழுந்த இயேசு கிறிஸ்து இன்றும் தமது மக்களுக்கு நடுவில் வாழ்கிறார், இதை நீ விசுவாசிக்கிறாயா? தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். நான் சொல்லுகிறேன், "தேவனிடத்தில் விசுவாச மாயிருங்கள்." வாருங்கள், அம்மா. நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, உமது ஆவியானவர் மக்களை அபிஷேகம் செய்யும் வேளையில், ஒவ்வொருவரும் சுகமாக்கப் படுவார்களாக. இந்தப் பெண்ணையும் சேர்த்து அருள்புரியும், இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே செல்லுங்கள். களிப்போடும் மகிழ்ச்சியோடும் செல்லுங்கள். சகோதரி, நீங்கள் வரும்போதே விசுவாசிக்கிறீர்களா? இரக்கமுள்ள தேவனே, நீர் அவளைச் சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஜீவனுள்ள தேவனுடைய சபையாக நாங்கள் சபிக்கையில் இந்தத் தீமை நீங்குவதாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே செல்லுங்கள். அது சரி. மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவே, எங்கள் சகோதரியைக் கட்டியிருக்கிற பிசாசு சபிக்கப்படக்கடவது. அவன் வெளியே வருவானாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். களிப்போடு, மகிழ்ச்சியாகச் செல்லுங்கள். ஆமென். 74 எல்லா இடங்களிலும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, நீங்கள் அனைவரும் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் இங்குள்ள இந்த ஊழியக்காரர்கள் ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன். மக்கள் சுகமாக்கப்படுகிறார்கள். தேவன் அசைவாடிக் கொண்டிருக்கிறார். அவர்களுடைய விசுவாசம் உயர்த்தப்பட்டிருக்கிறது, இப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி இருக்கிறீர்கள், அம்மா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் மார்பில் அங்கே ஒரு சிறிய சிலுவை வைத்திருக்கிறீர்கள். நீங்கள்-அந்தச் சிலுவையை விசுவாசிக்கிறீர்களா, இயேசு அங்கே கல்வாரியில் உங்கள் இடத்தை எடுத்துக் கொண்டார் என்று? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்களும் மிகவும் கலக்கமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதோ ஒரு விதமான இருமல் பிரச்சனை இருக்கிறது. அது ஆஸ்துமா. அது சரியல்லவா? அதிலிருந்து நீங்கள் விடுபட விரும்புகிறீர்களா? "நான் இப்போது இயேசுவை என் பரிகாரியாக ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். சபிக்கப்பட்ட அந்த காரியம் அவளை விட்டு நீங்குவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். தேவனைத் துதித்துக்கொண்டே செல்லுங்கள், அதிலிருந்து விடுபடுங்கள். 75 நல்லது. வாருங்கள், அம்மா. உங்களைச் சுகமாக்க முடியும் என்று உங்கள் முழு ஆத்துமாவோடும் மனதோடும் அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அது சரியா? உங்களுக்கு மிக மோசமான நோய் இருக்கிறது, மற்ற எதையும் விட அதிகமான மக்களைக் கொல்லும் நோய்: இதய நோய். ஆனால் பாருங்கள், உங்களைச் சுகமாக்குவதற்காகவே ஒரு நாள் அங்கு ஒரு இதயம் பட்டயத்தால் குத்தப்பட்டது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்கள் மீது இருந்து உங்களைச் சுகமாக்குவதாக. நல்லது. வாருங்கள். நல்லது. ஒரு சிறுமியும் அவளுடைய கண்களும். இயேசு உன்னைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? உமது நாமத்தில் நான் ஆசீர்வதிக்கிற இந்தக் குழந்தையை இயேசு ஆசீர்வதிப்பாராக. தேவனுடைய மகிமைக்காக அது சுகமாக்கப் படுவதாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, செல்லம். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. பிதாவே, நீர் இந்தத் தாயை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன், அவள் செல்வாளாக, தேவனுடைய சமாதானம் அவள் மீது இருப்பதாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நல்லது, வாருங்கள், சகோதரா. எல்லாரும் தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், சந்தேகப்பட வேண்டாம். விசுவாசித்தால் மட்டும் போதும், எல்லாம் கூடும்; விசுவாசியுங்கள். அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நல்லது. நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம், தேவனிடத்தில் விசுவாசமாயிருக்க வேண்டும். 76 எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் நடுக்கவாதத்தால் நடுங்குவதை நான் காண்கிறேன். எவரும் அதைப் பார்க்க முடியும். நாம் ஒரு நிமிடம் கர்த்தரிடம் பேசி, அவர் உங்களைப் பற்றி என்ன சொல்வார் என்று பார்ப்போம். நீங்கள் நடுங்குவதைப் பார்க்கிறேன், ஒருவேளை அது சில காலமாகவே அப்படி இருக்கிறது. நீங்கள் வயிற்றுக் கோளாறினாலும் அவதிப்படுகிறீர்கள். அது சரியா? அது சரி. இது நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் ஒரு அல்சர், இதனால் உங்கள் வயிற்றில் எரிச்சல் போன்றவையும் ஏற்படுகின்றன. இப்போது, மக்கள் நீங்கள் நடுங்குவதைப் பார்க்க முடிந்தது, எனவே வேறு ஏதாவது தவறாக இருந்தால், தேவன் அதைக் காட்டுவார் என்று நான் நினைத்தேன். அதனால் அவர்கள் அதைப் பார்க்கவில்லை. இப்போது, உங்கள் வீட்டில் உங்களைப் பார்க்கக்கூடிய, உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்த தேவன், நீங்கள் அவருடைய குமாரனை ஏற்றுக்கொண்டு, இனிமேல் அது உங்களிடம் இருக்க மறுத்தால், உங்களைச் சுகமாக்குவார். மேலும் சென்று நீங்கள் விரும்பியதைச் சாப்பிட்டு, உங்கள் கைகளை நேராக நீட்டி, "நான் இனிமேல் நடுங்கப் போவதில்லை" என்று சொல்லுங்கள். வீட்டிற்குச் செல்லுங்கள், நீங்கள் சுகமடைவீர்கள். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிசாசு சபிக்கப் படுவதாக. ஆமென்...?...இப்போது களி கூருங்கள். நல்லது. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். ஆமென். 77 எல்லாரும் ஏகமனதாக விசுவாசிக் கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? உங்கள் முழு ஆத்துமாவோடும்? உங்கள் முழு மனதோடும்? உங்கள் முழு பலத்தோடும்? விசுவாசமாயிருங்கள். நான் சொல்கிறேன், "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்." நல்லது, வாருங்கள், ஐயா. இந்தக் காரியங்களைச் செய்ய வல்லவராகிய தேவன் மட்டுமே, இன்று தமது சபையில் வாழ்கிற தமது குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதலில் நீங்கள் விசுவாசம் வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் ஒவ்வொரு முறையும் தேவன் முடியும்-ஒரு ஆசீர்வாதத்தை உச்சரிக்கும்போது, நீங்கள் அதைப் பற்றிக் கொண்டால், அது நிறைவேறியே ஆக வேண்டும். நிச்சயமாக, ஒருவர் அல்லது மற்றவர் என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை... இங்கே கீழே உள்ள டேப்புகளில் நான் அதைப் பிடித்துக் கொள்கிறேன், என்ன சொல்லப்படுகிறது என்று. நல்லது. இப்போது, நிச்சயமாக, நான் இருக்க வேண்டும்... பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்னை... இப்போது, அது என்னால் விவரிக்க முடியாத ஒன்று. அது இந்தக் கட்டிடத்தின் மீது இங்கே தொங்கிக்கொண்டிருப்பது போல் தெரிகிறது. அது தொடங்கும்போது-நான் பலவீனமடையத் தொடங்குகிறேன், அது கட்டிடத்தின் மேலெல்லாம் ஒரு பால் போன்ற பனிமூட்டமாக இருப்பது போல் தெரிகிறது. 78 அது பலருக்கும் சிறிதளவே தெரிந்த இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறது. ஆனால் தேவன் அந்த இடத்தில் வாழ்கிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் உணர்வுகளைப் பற்றி, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். அவர் சொன்னதை மட்டும் விசுவாசியுங்கள், ஏனென்றால் வேதவாக்கி யங்கள் தவறாது. "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவை களைப் பெற்றுக்கொள்வோம் (நிகழ்காலம்) என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (எதிர்காலம்)": பரிசுத்த மாற்கு 11:24. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். தேவன் அதை நிறைவேற்றுவார். எங்களால் சுகமாக்க முடியாது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று மட்டுமே நாங்கள் அறிவிக்க முடியும். அவர் மரித்தபோது உங்களைச் சுகமாக்கினார். உங்கள் நீதிமானாக்கப்படுதலுக்காக அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார். நீங்கள் அவரை விசுவாசிக்கும்போது, தேவனுடைய பார்வையில் நீங்கள் நீதிமானாக்கப்படுகிறீர்கள். பின்னர் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று விசுவாசியுங்கள். அவருடைய பிராயச்சித்தம் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இருந்தது. ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நோயாளிக்கும், இயேசு கல்வாரியில் அதை வைப்பகத்தில் வைத்தபோதே சுகம் கிடைத்தது. ஆமென். 79 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா, ஐயா? உங்கள் முழு இருதயத்தோடும்? நாம் அந்நியர்கள் என்று நான் நினைக்கிறேன், அல்லவா? நமக்கு ஒருவரையொருவர் தெரியாது, ஆனால் தேவன் நம் இருவரையும் அறிவார். அது சரியல்லவா? ஆம், ஐயா. மேலும் இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன், உங்களுக்கு உங்கள் விருப்பத்தைத் தருவதற்கு-தருவதற்கு இப்போது இங்கே இருக்கிறார் என்பதை-என்பதை-என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மேலும் தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு தாம் செய்வேன் என்று அவர் சொன்னதுபோல, அவர் செய்யும் காரியங்களை நாமும் செய்வோம் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஏதோ விசித்திரமாக இருக்கிறது... இல்லை, உங்களுக்கு ஒரு, அது ஒரு குடலிறக்கம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு இரட்டை குடலிறக்கம். அது உண்மையா? மேலும், நீங்களே ஒரு பிரசங்கியாராக இருக்கிறீர்கள். நீங்கள் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையைச் சேர்ந்தவர். நீங்கள் விஸ்கான்சின்-லிருந்து வருகிறீர்கள். அது உண்மையா? அப்படியானால் வீட்டிற்குச் சென்று சுகமடையுங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவாராக. நல்லது. 80 வந்து விசுவாசியுங்கள், அம்மா, அந்த... தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? சர்வவல்லமையுள்ள தேவனே, அவள் மீது இரக்கமாயிருந்து, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளைச் சுகமாக்கும். ஆமென். நல்லது. நல்லது. வாருங்கள். ஐயா, நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டால் மற்றும்... அதாவது உங்கள் பரிகாரியாக, நீங்கள்-நீங்கள் ஒருபோதும் குருடராக மாட்டீர்கள். அவர் செய்வார் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், "இயேசுவே, என் கண்களின் சுகத்திற்காக நான் உம்மை ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். சொல்கிறீர்களா? இங்கே வாருங்கள். வேதம் சொல்லுகிறது, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன: வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் கண்களின் குருட்டுத்தன்மை சபிக்கப்படுவதாக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. செல்லுங்கள், நீங்கள் இப்போது விசுவாசிக்கிறபடியே நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். 81 இப்போது சகோதரியே, அந்த இருதயக் கோளாறு நீங்கும், நீங்கள் அதை விசுவாசித்தால் அது மீண்டும் சாதாரணமாகவும் நன்றாகவும் துடிக்கும். நீங்கள் அதைச் செய்கிறீர்களா? இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்களாக. ஆமென். செல்லுங்கள், இப்போது தேவனின் சமாதானம் உங்களுடன் இருப்பதாக. செல்லுங்கள். இப்போது, அது சரியாகிவிட்டது. உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் விசுவாசித்து, தேவனுக்கு நன்றி செலுத்திச் செல்லுங்கள். சரி. உங்களை முடக்கும் அந்த மூட்டுவலியிலிருந்து நீங்கள் விடுபட விரும்பு கிறீர்களா...?... தேவன் உங்களைக் குணமாக் குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, பாருங்கள் அம்மா. நீங்கள் அந்த நிலையிலேயே இருக்கிறீர்கள், அது தேவனுக்குத் தெரியும்-அதாவது அது-அதற்கு விசுவாசம் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது பாருங்கள், நீங்கள் ஏன்... மருத்துவர்களால் நீங்கள் குணமடைய முடியாது. அவர்கள்-அவர்கள் அதைக் கைவிட்டுவிட்டார்கள். 82 எனவே நீங்களும் நானும் இப்போதே விசுவாசித்து அதை ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் செல்வோம். அதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? இந்த ஸ்திரீயைக் கட்டியிருக்கிற பிசாசு சபிக்கப்படுவதாக. இயேசுவின் நாமத்தில் அது அவளை விட்டு நீங்குவதாக. இப்போது, நீங்கள் எனக்காக-என்னைத் தேவனின் ஊழியக்காரனாக விசுவாசிப்பீர்களா? உங்கள் கால்களை இப்படி மேலேயும் கீழேயும் தூக்குங்கள். பயப்பட வேண்டாம்-பயப்பட வேண்டாம். உங்கள் கால்களை அப்படி மேலே தூக்குங்கள். இப்போது, நாமும் நீங்களும் நாம் இருந்ததைப் போல மேடையிலிருந்து நடந்து செல்வோம்... நாம் மிகவும் வேகமாகச் செல்வோம். ஆம். இப்போது, உங்கள் கால்களை நன்றாக உயரே தூக்குங்கள். இப்போது, நேராகக் கீழே வந்து தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். சரி. அம்மா, நீங்கள் வரும்போது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள். தேவனு டைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், அந்தப் பி-சத்துரு உங்கள் சரீரத்தை விட்டு நீங்குவானாக. ஆமென். இப்போது விசுவாசித்துச் செல்லுங்கள். எதையும் சந்தேகப்பட வேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 83 இப்போது, சகோதரியே, நீங்கள் இயேசுவை மட்டும் விசுவாசித்தால், அந்தப் பிசாசின் ஒடுக்குதலால் நீங்கள் இனி ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், பிசாசு இந்தப் பெண்ணை விட்டு நீங்குவானாக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செல்லுங்கள். இப்போது, ஒரு நிமிடம். ஏதோ நடந்துவிட்டது. அந்தப் பதிவில் என்ன-என்ன இருந்தது? அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை? நரம்பு தளர்ச்சி, நரம்பு தளர்ச்சி. நரம்பு தளர்ச்சியா? அது நரம்பு தளர்ச்சியா? ஆம், பிறகு... அது எங்கேயோ ஒன்று தாக்கியது, நேராக வெளியே... ஓ, அங்கே ஒரு மனிதர் புரோஸ்டேட் (prostate) பிரச்சனையுடன் அமர்ந்திருக்கிறார், சரியாக அங்கேயே அமர்ந்திருக்கிறார். வேண்டாம்... ஐயா, உங்களுக்குப் புரோஸ்டேட் பிரச்சனை இருந்த தல்லவா? சரி. நீங்கள் இப்போது அதிலிருந்து விடுபட்டுவிட்டீர்கள், எழுந்திருங்கள். இயேசுகிறிஸ்து உங்களைக் குணமாக்குகிறார். ஆமென். ஓ, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், கல்வாரியில் பிசாசு ஜெயிக்கப்பட்டான். ஆமென். ஆமென். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 84 அம்மா, அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிற நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் நெற்றியின் பக்கவாட்டில் வேறொன்று உள்ளது, அது மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு கட்டி. அது சரியா? இயேசுகிறிஸ்துவிடமிருந்து உங்கள் சுகத்தை இப்போது ஏற்றுக்கொள்கிறீர்களா? சரி. நீங்கள் விசுவாசித்தபடியே உங்களுக்கு ஆகக்கடவது. ஆமென். சரி. ஐயா, நீங்கள் வரும்போது, விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் தேவனின் ஊழியக்காரனாகிய என்னிடம் வருகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்களா? அப்படியானால்...?... [அந்த மனிதர் கூறுகிறார், "நான் ஒரு தூதனின் வழிகாட்டுதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இங்கே வந்திருக்கிறேன்."] சரி, ஐயா. அப்படியானால் சிகரெட் பிடிப்பதிலிருந்து விடுபடவே நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். செல்லுங்கள்... [ஒலி நாடாவில் காலியிடம், சிகரெட் பிடிப்பதிலிருந்து விடுவிக்கப்படுவதற்காக ஒரு தூதன் தன்னைச் சகோதரர் பிரன்ஹாம் இடம் அனுப்பியது குறித்து ஒரு சகோதரர் சாட்சி கூறுகிறார்.] 85 உங்களுடன் இருப்பதாக, அது முடிந்தது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். ஒரு நிமிடம் உங்கள் தலைகளை வணங்குங்கள், ஒரு செவிடு... ஓ தேவனே, ஜீவனின் காரணரே, ஒவ்வொரு நல்ஈவையும் அளிக்கிறவரே, உமது சமாதானத்தை இந்த மனிதன் மீது அனுப்பியருளும். இவனைக் கட்டியிருக்கிற இந்தச் செவிட்டு ஆவி வெளியே வரும்படிச் செய்யும். ஓ கிறிஸ்துவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, உமது ஆசீர்வாதங்கள் இவர் மீது தங்குவதாக. இவரை இந்த நிலையில் இருக்கச் செய்த இந்தப் பிசாசு, இன்றிரவு இவரை விட்டு நீங்குவானாக. மேலும் இன்றிரவு முதல், தேவனால் இவருக்கு இரக்கம் காட்டப்படுவதாக, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். இப்போது, பார்வையாளர்கள் தங்கள் தலைகளை வணங்கியபடி இருக்க வேண்டும், தயவுசெய்து. சாத்தானே, இந்த மனிதனை விட்டு வெளியே வா. செவிட்டு ஆவியே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், தேவனின் ஒரு ஊழியக்காரனாக நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 86 நான் சொல்வது கேட்கிறதா? [ஒரு மனிதர் கூறுகிறார், "ஆம், கேட்கிறது."] நான் சொல்வது கேட்கிறதா? இங்கே? "ஆமென்" என்று சொல்லுங்கள். ["ஆமென்."] நீங்கள் உங்கள் தலையை உயர்த்தலாம். இந்த மனிதர் குணமடைந்துவிட்டார். "ஆமென்" என்று சொல்லுங்கள். ["ஆமென்."] நான் கர்த்தரை நேசிக்கிறேன். ["நான் கர்த்தரை நேசிக்கிறேன்."] நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரனாக விசுவாசிக்கிறீர்களா? இங்கே உங்களிடம் இது தொங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால், அதைப் பார்ப்பதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது, ஏனென்றால் அது செவிடு என்று அழைக்கப்படுகிறது. நீங்களும் நானும் ஒரு நிமிடம் பேசுவோம். நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக விசுவாசிக்கிறீர்களா? ஒரு ஊழியக்காரனாக? விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் அப்படிச் செய்யத்தான் வேண்டும். உங்கள் காதொலி கருவி வெளியே எடுக்கப்பட்டுவிட்டது, மேலும் நான் இப்படிப் பேசுவதை நீங்கள் அங்கே நின்றபடி கேட்கிறீர்கள். நான் ஒரு சாதாரணக் குரலில்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். மேலும் நீங்கள் நான் சொல்வதைக் கேட்கிறீர்கள். இப்போது, ஆம். ஆம், நீங்கள் ஒருகாலத்தில் சிகரெட் பிடித்தீர்கள், ஆனால் அதை நிறுத்திவிட்டீர்கள். அது சரியா? 87 மேலும் கேளுங்கள், உங்களுக்கு, தொண்டையில் அல்லது ஏதோ ஒரு விதமான அறுவை சிகிச்சை நடந்தது, அது சரியா? அது சரியாகக் குணமடையவில்லை, அல்லது அது வெற்றிகரமாக அமையவில்லை. அது... அது-அது இப்போது போய்விட்டது...?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அல்லேலூயா. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம். ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் அம்மா. நீங்கள் என்னைத் தேவனின் ஊழியக்காரனாக விசுவாசிக்கிறீர்களா? அம்மா, அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிற நீங்கள், என் பக்கம் இப்படிப் பாருங்கள். அவளுடன் பேசிக்கொண்டிருக்கிற நீங்கள்தான். இந்தப் பக்கம் பாருங்கள். அவளுக்கு என்ன பிரச்சனை என்று பார்ப்போம். சரி. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். உங்களுக்கு... அது உயர் இரத்த அழுத்தம். மேலும் உங்களைக் கட்டிப்போட்டிருப்பது மூட்டுவலி. உங்கள் சரீரத்தில் இரத்த ஓட்டமும் சரியாகப் பாயவில்லை. அது உண்மையா? அது உண்மையானால், உங்கள் கையை மேலே தூக்குங்கள். அது உண்மையானால். அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அம்மா, அவள் என்றால்... மீண்டும் எதிரொலிகள் வருகின்றன. அவளால் கேட்க முடியாது. நான் அதை அவள் மேல் காண்கிறேன். அவளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது... சரி. 88 சகோதரர் போஸ்? சரி. அவளிடம் சொல்லுங்கள், அவள் என்னைத் தேவனின் ஊழியக்காரனாக விசுவாசித்தால், ஸ்ட்ரெச்சரி லிருந்து எழுந்து வீட்டிற்குச் சென்று குணமாகும்படி நான் சொன்னேன் என்று. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அவளைக் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள், அந்த மூட்டுவலி அவளை விட்டு நீங்கும். நீங்கள் அதைச் செய்தால்-உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால். சரி. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அதோ அவள் கட்டப்பட்ட நிலையிலிருந்து வருகிறாள், மூட்டுவலியுடன் இங்கே கொண்டுவரப்பட்டவள். அதோ அவள் முற்றிலும் சாதாரணமாகவும் நன்றாகவும் இருக்கிறாள். அம்மா, உங்கள் படுக்கையை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். இயேசுகிறிஸ்து உங்களை முழுமையாக்கியிருக்கிறார். நாம் தேவனுக்குத் துதி செலுத்துவோம். அல்லேலூயா. யாரிடமிருந்து எல்லா ஆசீர்வாதங்களும்... இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி 2